அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


Tuesday, May 16, 2017: மே 16
சவுதியில் 90 நாள் பொதுமன்னிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏராளமானோர் வெளியேறிவருகின்றனர். அதேபோல் பல ஸ்பான்ஸர்களும், நிறுவனங்களும் தங்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைபார்க்கும் தொழிலாளிகளை தக்கவைப்பதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மன்னிப்பு காலத்திற்குப் பின்னும் சட்டத்திற்கு புறம்பாக வேலை வழங்குபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும், அதேபோல் சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் தங்கியுள்ள தொழிலாளர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு 50,000 ரியால் வரை பரிசுகள் வழங்கப்படும் என்றும், சட்டபூர்வமற்ற தொழிலாளர்களிடமிருந்து 15,000 ரியால் முதல் 100,000 ரியால்கள் வரை அபராதமும் வசூலிக்கப்படுமென்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜமான் பின் அஹமது அல் காம்தி அவர்கள் இதனை உயர் அதிகாரிகள், பழங்குடியினர், கல்வித்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அல் பஹாவில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-