அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மே-09
சவுதி அரேபியாவில் ஐந்து நேர வக்த் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டவுடன் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கட்டாயம் அடைக்கப்பட்டு ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் தான் மீண்டும் வர்த்தக மையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த இடைவெளி என்பது சுமார் 30 நிமிடங்கள் வரை இருக்கும்.

இந்நிலையில், 'ஷூரா கவுன்சில்' எனும் சவுதி அரசிற்கான உயரிய ஆலோசணை சபை, நாடு தழுவிய அளவில் வர்த்தக மையங்கள் மற்றும் சூக்குகளுக்கு அருகேயுள்ள பள்ளிவாசல்களில் ஜமாஅத் தொழுகைக்காக பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் காத்திருக்கும் நேரத்தில் சுமார் 5 நிமிடங்கள் வரை குறைக்க தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளும்படி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், பார்வையற்றவர்கள் ஓதும் வகையில் புனிதமிகு திருக்குர்அன் அச்சிடும் பணிகளை துரிதப்படுத்துமாறும் மதினா நகரில் உள்ள 'கிங் பஹத் புனித திருக்குர்அன் அச்சிடும் நிலையத்தையும்' கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் இமாம்கள், முஅத்தின்கள், அழைப்பாளர்கள், பள்ளி பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்கவும் அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: 
அதிரை நியூஸ்:  நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-