அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 


பெரம்பலூர்,மே 16:
அப்பாவித்தனமாக ஷேர் ஆட்டோ வில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏறி வந்தச் சிறுமி. அன்னையர் தினத்தில் அலறித் துடித்த தாய், 5மணி நேரத்திற்குப் பிறகு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
பெரம்பலூர் வடக்கு மாதவி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியின் மகள் 5 வயது சிறுமி. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. கடந்த 14ம் தேதி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அவ்வூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்லும் ஷேர் ஆட்டோவில், அப்பகுதி பொது மக்களோடு ஆர்வமாக ஏறி அமர்ந்தார்.
பெரம்பலூர் புது பஸ்டாண்ட் வரை வந்த யாரோ ஒருவரு டன் தான் அந்தச் சிறுமி வந்திருப்பார், சிறுமிக்கு யாராவது கட்டணம் கொடுத்திருப்பார்கள், என நினைத்து ஷேர் ஆட்டோ டிரைவரும் கண்டு கொள்ளாமல் இருந்து விட் டார்.
இத னை ய டுத்து பெரம்பலூர் புது பஸ்டாண்ட் வந்த டைந்த ஷேர் ஆட்டோவில் அனை வ ரும் இறங் கு வ தைப் பார்த்த சிறு மி யும் இறங் கி னார். பெரம்பலூர் புது பஸ்டாண்ட் உட்புறத்திலும், வெளிப் பு றத் தி லும் மணிக் க ணக் கில் வலம் வந்த சிறு மிக்கு இந்த பகுதி எந்த ஊர், நமது ஊரைப் போல் இல் லையே என்று தோன் றி யுள் ளது.
சுற் றிச் சுற்றி வந் தும் நமது வீட்டையோ, அம்மாவையோ காணவில்லையே என தவித் துள் ளார். இந் நிலையில் செய்தித் துறையில் (திருச்சி மாவட்ட ஜூனியர் விகடன்) பணியாற்றும் திருவாளந்துறையைச் சேர்ந்த ஆனந்த குமார் என்பவர் தனியாக நின்ற சிறுமியை பார்த்து நலம் விசாரித்தார்.
அப்போது தான் அது வாய்பேச முடியாத சிறுமி யென்ற விபரம் தெரிய வந்தது. இத னை ய டுத்து பெரம்பலூர் போலீசாருக்கு தக வல் அளிக் கப் பட் டது. அந் தச் சிறு மி யி டம் பெயர், ஊர் குறித்து கேட் ட தற்கு ஷேர் ஆட் டோவை மட் டும் கைகாட் டி னார்.
இத னை ய டுத்து இரவு 7.45மணியளவில் மகளை காண வில்லை என்று கூறி பெரம்பலூர் ஸ்டேசனுக்கு வந்த வடக்கு மாதவி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் மற்றும் உறவினரை பஸ் ஸ்டாண்டிற்கு காவலர் அலெக்ஸ் அழைத்து வந் தார்.பர்தா போட்டுக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் பல பெண் கள் குறுக் கும் நெடுக் கு மாக சென்று கொண் டி ருந் த போ தும், தூரத் தில், போலீ ஸா ரு டன் பர் தா அ ணிந்து வந்து கொண் டி ருந்த தனது தாயைக் கண் ட வு டன் அந் தச் சிறுமி ஓடிச் சென்று கட் டிப் பிடித் துக் கொண் டார். அந் தப் பெண் ணும் மகளைக் கட்டி அணைத்து கதறி அழுதார்.
பிற கு தான் சிறுமி ஷேர் ஆட் டோ வில் விளை யாட் டாக ஏறி பெரம்பலூர் வந்த விபரம் தெரி ய வந் தது. உலகெங்கும் அன்னையர் தினம் கொண்டாடிக் கொண் டி ருந் த போது, வாய் பேச முடி யாத மக ளைக் காணா மல் தவித்து, 5மணி நேரத் திற் குப் பிறகு கிடைத் த தால் தாய் ஆனந்த கண்ணீர் வடித்து கண்ணீர் மல்க நன்றி தெரி வித் தது நெகிழச் செய்தது.

அன்னையர் தினத்தில் ஒரு அழகு தேவதையை காப்பாற்றிய சந்தோசத்தில் ..
சற்று முன், அவசர தேவைக்காக நானும் என் மனைவியும் பெரம்பலூர் வந்திருந்தோம்.
பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் ஒரு அழகான 5வயதுடைய பெண் குழந்தை தன்னந்தனியாக நின்று கொண்டிருக்க அதைப்பார்த்த என் மனைவி குழந்தையிடம் பேச்சு கொடுத்து விசாரிக்க, அந்த குழந்தை  ஏதுமறியாத குழந்தை தனத்தோடு நின்றார்.
அந்தக் குழந்தையை அப்படியே விட்டு வர முடியாதவர்களாய், அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நினைத்து, பெரம்பலூர் நகர போலீசாரை அழைத்தோம்.
அதேபோல் ராஜ் டிவி பத்திரிகையாளர் அண்ணன் சிவாவை தொடர்புகொண்டு தகவலை சொன்னேன். இதேபோல் ஊட்டி காபிபார் செல்லப்பிள்ளை உள்ளிட்டவர்களிடம் தகவல் சொல்லி உதவிக்கு அழைத்தேன்.
குழந்தையோடு சுமார் 45நிமிடங்கள் இருந்தேன். அப்பா யார், எங்கிருந்து வந்தீங்க. போன் நம்பர் தெரியுமா? என அவரோடு பயணித்தேன். ஆனால் அவர் பேசவே இல்லை. எனக்குள் ஒரு வித பதற்றம் கூடியது. ஆட்டோவை மட்டும் கை காட்டினார். எனக்கு பதற்றம் கூடியது. அதோடு பலரையும் தொடர்பு கொண்டேன்.
அடுத்த சில நொடிகளில் என் அழைப்பை ஏற்று அண்ணன் ராஜ் டிவி சிவா, தினமலர் செல்வராஜ்,அசுபதி, ஊட்டி காபி பார் செல்லப்பிள்ளை என பலரும் அங்கு வந்தார்கள்.
அவர்களும் குழந்தையிடம் பேசினாலும் பதிலில்லை. குழந்தையை பத்திரமாக பெற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனது துடித்தது.
காவலர் அலெக்ஸ் வந்தார். பாப்பாவிடம் பேசினார். என் செல்போனில் அழகாக விளையாடிக்கொண்டிருந்தார்.
எங்களுக்குள் பெரும்பதற்றம் கூடியது. அங்கு கூடிய கூட்டம் குழந்தையை போட்டோ எடுத்து தள்ளியது. அடுத்த கொஞ்ச நேரத்தில் காவலர் அலெக்ஸ், குழந்தையின் அம்மா,சித்தப்பாவோடு வந்தார்.
பெருங்கூட்டத்துக்கு நடுவே, தாயை பார்த்த அவள், தாவி அணைத்தார். அந்த தாயின் கண்ணீரில் ஆயிரம் பதற்றம் உணர்ந்தேன்.
வாய் பேச இயலாத அந்த குழந்தை, வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி வந்துவிட்டால் என்பதும், குழந்தையை தேடி அவரது பெற்றோர் ஊரெல்லாம் தேடி கடைசியாக தகவலறிந்து வந்ததும் தெரிந்து கொண்டோம்.
அவரின் தகவல்களை உறுதிபடுத்திக்கொண்டு, குழந்தையை காவலர் அலெக்ஸ் பெற்றோரிடம் ஒப்படைத்தார்..
பெரும் மனநிறைவேடு மீண்டும் திருச்சி பயணிக்கிறேன்..
அன்னையர் தினத்தில் நடந்த இந்த நிகழ்வும். அவசரம் என்றதும் ஓடி வந்த அண்ணன்கள் அனைவருக்கும் நன்றிகள்..
சி.ய.ஆனந்தகுமார்.

ஜூனியர் விகடன்

திருச்சி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-