அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: மே 19
1973 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி முதன்முதலாக 1, 5, 10, 50 மற்றும் 100 திர்ஹங்கள் மதிப்புள்ள நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 44 ஆண்டுகளை பூர்த்தியாகியுள்ளது. இது கால ஓட்டத்தில் பலமாற்றங்களையும் சந்தித்து வந்துள்ளது. ஆரம்பத்தில் குதிரையை நீர்முத்திரையாக (Horse as water mark) கொண்டு வெளியானவை பின்பு அமீரகத்தின் தேசியப் பறவையான கழுகு இடம்பெற்றது..

முன்பு அமீரக கரன்சி போர்டு (UAE Currency Board) என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்ட திர்ஹங்கள் பின்பு அமீரக மத்திய வங்கியின் (UAE Central Bank) பொறுப்புக்குள் வந்தது.

ஆரம்பத்தில் அச்சான நோட்டுக்களில் 7 எமிரேட்டுகளையும் குறிக்கும் பெயர்களும் சின்னங்களும் பின்னனியில் இடம்பெற்று வந்ததும் மாற்றப்பட்டு அமீரகத்தை ஒருமைப்படுத்தும் சின்னங்கள் இடம்பெறத் துவங்கின. குறிப்பாக,

1 திர்ஹத்தில் துபையின் கிளாக் டவரும் ஷார்ஜா போலீஸ் கோட்டையும் (Clock Tower & Sharjah Police Fort), 5 திர்ஹத்தில் புஜைராவின் பழைய கோட்டையும் (Fujairah's Old Fort), 10 திர்ஹத்தில் உம்மல் குவைனின் வான்வழிக் காட்சியும் (Aerial View of UAQ), 50 திர்ஹத்தில் அஜ்மான் ஆட்சியாளரின் அரண்மனையும் (Palace of HH Ruler of Ajman), 100 திர்ஹத்தில் ராஸ் அல் கைமாவின் அல் ரம்ஸ் பகுதியும் (Al Rams area of RAK) இடம் பெற்றிருந்தன. அதேபோல் 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 500 மற்றும் 1,000 திர்ஹம் நோட்டுக்களில் அபுதாபி அல் ஜஹீலீ கோட்டையும் (Al Jahilie Fort of Abu Dhabi), துபையின் பழைய கோட்டையும் (Old Fort of Dubai) இடம் பெற்றிருந்தன.

இன்றும் ஒரு சிலரிடம் எஞ்சியிருக்கும் 1 முதல் 100 வரை மதிப்புள்ள பழைய திர்ஹ நோட்டுக்கள் சுமார் 1,500 திர்ஹம் வரை விலை போகின்றன, 1,000 திர்ஹம் நோட்டுக்கள் 4,000 திர்ஹத்திற்கு விலை போகின்றன. இதை பழைய நோட்டு சேகரிப்பாளர்களும் வெளிநாட்டுக்காரர்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் என துபையில் இதையே தொழிலாக செய்து வரும் ராம் குமார் என்பவர் கூறினார்.

அமீரகத்தில் திர்ஹங்கள் அறிமுகம் செய்யப்படும் முன் இந்திய ரூபாய்கள் (Indian Rupees) மற்றும் வளைகுடா நாடுகளுக்கு என பொதுவாக அச்சிடப்பட்ட ரூபாய்கள் (Gulf Rupees) அதிகம் பயன்படுத்தப்பட்டது என்றாலும் துபை ரியால் (Dubai Riyal), கத்தாரி ரியால் (Qatar Riyal) போன்றவையும் பயன்பாட்டில் இருந்துள்ளன. கூடுதலாக அபுதாபியில் மட்டும் பஹ்ரைனி தினார் (Bahraini Dinar) செல்லுபடியாகியுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: 
அதிரை நியூஸ்நம்ம ஊரான்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-