அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மே-01
செய்யாத தவறுக்கு தண்டனையாக மனைவியை மரணத்திற்கு தாரைவார்த்து விட்டு 40 நாள் கைக்குழந்தையுடன் திரும்பினார் ஹைதராபாத் இளைஞர் மஜ்ஹருத்தீன்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன் பல்வேறு எதிர்கால சுயதொழில் கனவுகளுடன் சவுதிக்குள் காலடி எடுத்து வைத்தனர் ஹைதராபாத்தை சேர்ந்த மஜ்ஹருத்தீன் ஆமினா பானு தம்பதியினர் ஆனால் அவர்களுடைய ஸ்பான்சர் சவுதியின் 'நிதாகத்' சட்டப்படி சிவப்பு பட்டியலிடப்பட்டவர் என்பதால் அவர்களால் முறைப்படி ரெஸிடென்சி விசா அடிக்க இயலவில்லை.

எதிர்பாராத இந்த சூழ்நிலையால் தம்பதியினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்டனர். இந்நிலையில் ஆமினா பானு கர்ப்பம் தரிக்க அவர்களின் நிலை இன்னும் மோசமானது. இகாமா அடிக்க முடியாததால் அவர்களால் மருத்துவ இன்ஷூரன்ஸ் மற்றும் போதிய மருத்துவ உதவிகளையும் ஆலோசணைகளையும் பெற முடியவில்லை. மேலும், கர்ப்பிணி ஆமினா பானுவிற்கு உதவியாக யாரையும் தாயகத்திலிருந்து தருவிக்கவும் முடியவில்லை.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்த மூன்றாம் நாள் ஆமினா பானு இறந்து போனார் எனினும் அவருக்கு முறையான இருப்பிட அனுமதி இல்லாததால் ஜனாஸாவை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் ரியாத் நகரிலேயே அடக்கம் செய்தார்.

மனைவி இறந்ததை தொடர்ந்து கைக்குழந்தையுடன் தவித்தவருக்கு தன் குழந்தையின் பிறப்பைக் கூட இங்குள்ள Civil Affairs அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாததால் அக்குழந்தைக்கு பாஸ்போர்ட் பிரச்சனையும் எழுந்தது என்றாலும் 90 நாள் பொதுமன்னிப்பு அறிவிக்கப்படும் முன்பே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான எக்ஸிட் விசாவை மனிதாபிமான அடிப்படையில் கைக்குழந்தைக்கு மட்டும் வழங்கியது சவுதி பாஸ்போர்ட் துறை.

இறுதியாக, சவுதி அரசால் 90 நாட்கள் பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய தூதரக உதவியுடன் எமர்ஜென்ஸி சர்ட்டிபிகேட்டை பெற்று கசப்பான நினைவுகளையும் பச்சிளம் குழந்தையையும் சுமந்தவாறு நாடு திரும்பினார் மஜ்ஹருத்தீன்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-