அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: மே 16
அமீரகத்தில் தற்போது பல்வேறு சிறுகுற்றங்களுக்கு சிறை மற்றும் அபராதங்கள் விதிக்கப்படுவதற்கு பதிலாக தெருக்கூட்டுதல், முக்கிய இடங்களை சுத்தம் செய்தல் போன்ற சமூக சேவைகள் தண்டனையாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சமூகத்திற்கும் பயன், தண்டனை பெற்றவரும் அதனை பார்ப்பவர்களும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்தும் தங்களை தற்காத்துக் கொள்வர்.

அபுதாபியில் போக்குவரத்து சம்பந்தப்பட்ட சில குற்றங்களில் ஈடுபட்டோர், பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டியவர்கள், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை ஓட்டியோர், சாலைகளில் வாகன ஸ்டண்ட்களை நிகழ்த்தியவர்கள், ரேஸ்களில் ஈடுபட்டோர் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு அவ்விடத்திலிருந்து நிற்காமல் தப்பித்துச் சென்றோர் என 25 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் சாலைகள், பள்ளிவாசல்கள், நூலகங்கள், கடற்கரைகள், மக்கள் கூடம் இடங்கள், மாற்றுத்திறனாளி மையங்கள், பூங்காக்கள் போன்ற பல இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் மறுப்போர் 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதங்களை செலுத்த நேரிடும்.

Source: Khaleej Times
தமிழில்: 
அதிரை நியூஸ் நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-