அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... மே-11
ரியாத்தில் 'தேசியமயமாக்கப்படும் வேலைவாய்ப்புக்கள்' (Job nationalization) என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு அமைச்சரக அதிகாரிகள், மனிதவளத்துறை அதிகாரிகள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் எனப்பலரும் பங்குபெற்று சவுதி அரேபியாவை வேலைவாய்ப்புத் துறையில் முழுமையான தற்சார்பு பெற்ற நாடாக மாற்றுவது மற்றும் அதில் காணப்படும் இடர்பாடுகள் குறித்தும் அலசி ஆராய்ந்தனர்.

கருத்தரங்கிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அரசுப்பணிகளுக்கான துணை அமைச்சர் அப்துல்லா அல் மெல்பி (The Ministry of Civil Service, deputy minister Abdullah Al-Melfi), கடந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி சுமார் 70,000 வெளிநாட்டு ஊழியர்கள் அரசுத்துறைகளில் பணியாற்றுவதாகவும், இவர்களை படிப்படியாக 2020 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக விடுவித்துவிட்டு சவுதியர்களுக்கு மட்டும் அந்த வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என அனைத்து அமைச்சு மற்றும் அரசுத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-