அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: மே 16
சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹீமோடயாலிஸிஸ் பிரிவில் பணியாற்ற 150 ஆண் / பெண் செவிலியர்கள் தேவை.

இதுகுறித்து வேலைவாய்ப்பு நிர்வாக இயக்குனர் டாக்டர் என். சுப்பையன் இ.ஆ.ப வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பது:
சவூதி அரேபியாவில் உள்ள டையாவரம் தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்ஸி/ டிப்ளோமா தேர்ச்சியுடன் ஹீமோடயாலிஸிஸ் பிரிவில் தொடர்ந்து 2 வருட பணி அனுபவம் பெற்ற 150 ஆண் / பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்வு செய்யப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ 55 ஆயிரம் மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவக் காப்பீடு ஆகியன இலவசமாக வழங்கப்படும்.

நேர்முகத்தேர்வு சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 21.05.2017, 22.05.2017 ஆகிய நாட்களிலும், பெங்களூரில் இன்பேண்டரி சாலையில் உள்ள மோனார்க் லக்சர் என்ற ஓட்டலில் 23.05.2017, 24.05.2017 ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் நடைபெறும்.

விருப்பமும், தகுதியும் உள்ள ஹிமோடயாலிசிஸ் செவிலியர்கள் 19.05.2017க்குள் omceq049@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044-22505886 / 22502267 / 22500417 / 8220634389 ஆகிய தொலைப்பேசி எண்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

Thanks:அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-