அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதியில் செயல்படும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவர் 1 முதல் ஏப்ரல் 30 வரை 661 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு 174 நிறுவனங்கள் மீது ஆட்சேர்ப்பு ஓழுங்குமுறை மற்றும் விதிமீறல் குற்ற வழக்குகள் பதியப்பட்டன.

அதிரடி சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட 14 நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டன மேலும் 40 நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேலைக்கு ஆட்சேர்க்கும் நிறுவனங்கள் சட்டவிதி மீறல்களில் ஈடுபட்டால் 19911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது https://www.musaned.gov.sa/ என்ற இணையதளம் வழியாவோ அல்லது அருகிலுள்ள MLSD branch அலுவலகத்திலோ புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அமைச்சகத்தின் முஸாநத் இணையதளத்தில் 605 அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் குறித்த விபரங்களும், சுமார் 40,000 உள்நாட்டு தொழிலாளர்கள் குறித்த விபரங்கள் இருப்பதாகவும், இணையதளம் வழியாக இதுவரை சுமார் 61,411 உள்நாட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்பது நிஜம் தானே!

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: மே 15:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-