அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,மே20:
பெரம்பலூரில் இரட்டையராகப் பிறந்த மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் ஒரே மதிப்பெண்களாகப் பெற்ற அதிசயம் நடந்துள்ளது.
மனிதப் பிறவியில் ஒரே கருவில் இரு உயிர்கள் ஜனித்து, அவை இரட்டையராக பிறப்பதுண்டு. இவர்கள் முகம், உடலமைப்பு என உருவங்களில் ஒற்றுமையாக இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சிந்தனையிலும், செயலிலும் ஒரே மாதிரியாக இருப்பது இரட்டையரிலும் அபூர்வமாகக் கருதப்படுகிறது.
பெரம்பலூர், துறை மங்கலம், அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சிவ ராமன். வெல்டிங் மெக்கா னிக் கான இவ ரது மனைவி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் இள நிலை உதவியாளராகப் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு புஷ்பலதா, புனித வள்ளி ஆகிய 2 மகள்கள் உள் ள னர். இரு வ ரும் இரட் டை யர் கள்.
இரு வ ரும் தற்போது பெரம்பலூர் செங்குணம் பிரிவு ரோடு அருகேயுள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 10ம்வகுப்பு படித்து முடித்து பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். நேற்று தேர் வு மு டி வு கள் வெளி யி டப் பட் டன. இதில் புஷ்பலதா, புனித வள்ளி ஆகிய இரு வரும் 500க்கு 435 மதிப்பெண்களைப் பெற் றி ருந் தது பல ரை யும் வியப் பில் ஆழ்த் தி யுள் ளது.
இது பற்றி நீதி மன்ற ஊழியரான அலமேலு தெரி விக் கை யில், ஒன் றா கவே பள் ளிக் குச் செல் வார் கள், ஒரே மா தி ரி யா கவே துணி க ளை யும் உடுத் து வார் கள், இடைப் பட்ட தேர் வு க ளில் கூட இரு வ ருக் கும் ஒன் றி ரண்டு மதிப் பெண் கள் தான் வித் தி யா ச மி ருக் கும். தற் போது பொதுத் தேர் வில் ஒரே மதிப் பெண் க ளைப் பெற் றுள் ள னர். இரு வ ரும் பிளஸ் 1ல் பயோ கம்ப்யூட் டர் சயின்ஸ் பாடத் தில் சேர விருப் பம் தெரி வித் துள் ள னர் என் ற னர்.
இரட்டையர் மாணவிகளான புஷ்ப லதா, புனித வள்ளி ஆகி யோர் வயிற்றில் ஒன்றாகக் கரு வுற் ற தைப் போல், வகுப் ப றை யிம் ஒரே மதிப் பெண் களை பெற் றி ருப் பது இரு வ ருக் கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித் துள் ளது. இவர் களை அர சு அ லு வ லர் குடியி ருப் பு வா சி க ளும், பள் ளி மு தல் வர் உள் ளிட்ட ஆசி ரி யர் க ளும் பாராட்டி வருகின்றனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-