அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் : அக்னி நட்சத்திரத்தில் பெரம்பலூரில் 101.3 டிகிரி தாக்கிய வெப்பத்தால் பொதுமக்கள், குழந்தைகள் அவதிக்குள்ளானார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மிக அதிகப்பட்சமாக 106 டிகிரி வெயில் சுட்டெரித்தது. மேலும் ஏப்ரல் மாதத்தில் 99 சதவீத நாட்களில் 100 சதத்திற்கு மேலாகவே வெயில் வாட்டியது.

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 101.3 டிகிரி வெப்பம் தாக்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறுகள் என அனைத்து நீர்நிலைகளும் வறண்டுவிட்டதாலும், பயிர்சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள தாலும், குளிர் காற்றுக்கு வேலையே இல்லாமல் பகல் முழுவதும் அனல்காற்று வீசியது. வெப்பத்தின் சூட்டைத் தணிக்க இளநீர், நொங்கு, தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, எழுமிச்சை, முழாம்பழம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.இவையன்றி மோர், சர்பத் போன்ற உள்ளூர் குளிர்பானங்களையும், ரசாயண குளிர்பானங்களையும் வாங் கிப்பருகி தாகத்தைத் தணித்து வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் பகலில் வெளியேவர அச்சப்படுகின்றனர்.

கல்வி, அலுவல் காரணமாக வெளியே வரும் பெண்கள் துப்பட்டாக்களால் முகத்தை மூடிக் கொண்டும், குடை பிடித்தபடியுமே தெருக்களில் நடமாடி வருகின்றனர். பலர் உடல் சூட்டால் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். குழந்தைகள் வெயில் காரணமாக வேர்க்குரு பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு ஷோ ரூம்களில் விதவிதமான வேர்க்குரு பவுடர்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-