அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மே-14
அமீரக உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, 2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிகளும் அபராதங்களும் மேலும் கடினமாகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் தான் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் பல புதிய சேர்க்கைகள் செய்யப்பட்டுள்ளன.

பிற வாகனங்களை விதிகளை மீறி முந்திச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது 1,000 திர்ஹம் அபராத்துடன் 6 கரும்புள்ளிகளும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் 1,000 திர்ஹம் மற்றும் திடீரென முன்னெச்சரிக்கை இன்றி வாகனத்தை திருப்பினாலும் 1,000 திர்ஹம் என அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்,
1. போதை மருந்து மற்றும் அதற்கு ஈடான பொருட்களை உட்கொண்டு வாகனத்தை செலுத்தினால்: தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கும் அத்துடன் 23 கரும்புள்ளிகள் மற்றும் 60 நாட்களுக்கு வாகன முடக்கம்.

2. மது பானங்களை உட்கொண்டு வாகனத்தை செலுத்தினால்;: தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கும் அத்துடன் 23 கரும்புள்ளிகள் மற்றும் 90 நாட்களுக்கு வாகன முடக்கம்.

3. நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை செலுத்தினால்: 3,000 திர்ஹம் அபராதம் அத்துடன் 23 கரும்புள்ளிகள் மற்றும் 90 நாட்களுக்கு வாகன முடக்கம்.

4. சிவப்பு விளக்கை மீறிச்சென்றால் 1,000 திர்ஹம் அபராதம், 12 கரும்புள்ளிகள் மற்றும் 30 நாட்களுக்கு வாகன முடக்கம்.

5. மொபைல் போனை பாவித்தால் 800 திர்ஹம் அபராதத்துடன் 4 கரும்புள்ளிகள்.

6. சட்ட விரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றால் 3,000 திர்ஹம் அபராதம் மற்றும் 24 கரும்புள்ளிகள்.

7. ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிச் சென்றால் 2,000 அபராதத்துடன் 60 நாட்களுக்கு வாகன முடக்கம்.

8. அதிகம் சத்தம் எழுப்புகின்ற வாகனத்தை ஓட்டினால் 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 6 கரும்புள்ளிகள்.

9. அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 50 சதவிகிதம் கருமையான கண்ணாடித்திரையை ஒட்டினால் 1,500 திர்ஹம் அபராதம்.

10. வாகன அனுமதி காலாவதியான பின்பு புதுப்பிக்காவிட்டால் 500 திர்ஹம் மற்றும் 7 நாட்கள் வாகன முடக்கம் (3 மாதங்களை தாண்டிய வாகனங்களுக்கு மட்டும்).

11. 10 வயதுக்கு குறைந்த அல்லது 145 செ.மீ அளவுக்கும் குறைந்த குழந்தைகளை முன்பக்க இருக்கையில் அமர வைத்தால் 400 திர்ஹம் மற்றும் 4 கரும்புள்ளிகள்.

12. பாதுகாப்பு பெல்டை அணியாவிட்டால் 400 திர்ஹம் மற்றும் 4 கரும்புள்ளிகள்.

வேகக்கட்டுப்பாடுகள் மீதான அபராதங்கள்:
1.அனுமதிக்கப்பட்ட அளவை விட 80 கி.மீ மேலதிக வேகத்தில் சென்றால் 3,000 திர்ஹம் அபராதம், 23 கரும்புள்ளிகள் மற்றும் 60 நாட்களுக்கு வாகன முடக்கம்.

2. அனுமதிக்கப்பட்ட அளவை விட 60 கி.மீ மேலதிக வேகத்தில் சென்றால் 2,000 திர்ஹம் அபராதம், 12 கரும்புள்ளிகள் மற்றும் 30 நாட்களுக்கு வாகன முடக்கம்.

3. அனுமதிக்கப்பட்ட அளவை விட 60 கி.மீ அதிக வேகத்திற்குள் சென்றால் 1,500 திர்ஹம் அபராதம், 6 கரும்புள்ளிகள் மற்றும் 15 நாட்களுக்கு வாகன முடக்கம்.

4. அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 கி.மீ அதிக வேகத்திற்குள் சென்றால் 1,000 திர்ஹம் அபராதம்.

5. அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 கி.மீ அதிக வேகத்திற்குள் சென்றால் 700 திர்ஹம் அபராதம்.

6. அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 கி.மீ அதிக வேகத்திற்குள் சென்றால் 600 திர்ஹம் அபராதம்.

7. அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 கி.மீ அதிக வேகத்திற்குள் சென்றால் 300 திர்ஹம் அபராதம்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-