
ஒரு பெரிய மலையில், ஒரு விவசாயி கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தார்..
அப்பொழுது திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் அவர் அருகில் வந்து தரை இறங்கியது, அதில் இருந்து ஒருவர் இறங்கி வந்தார்.
’பெரியவரே! நீங்கள் எத்தனை மாடுகள் வைத்துள்ளீர்கள்,என்று நான் சரியாக சொல்லிவிட்டால் எனக்கு ஒரு கன்னு குட்டியை தருவீர்களா’ என்று அந்த நபர் கேட்டார்?, அந்த பெரியவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
அந்த நபர் உடனடியாக தன்னுடைய ஸ்மார்ட் போன் எடுத்து தான் இருக்குமிடத்தை சாட்டிலைட் இமேஜ் எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பி, தான் இருக்கும் இடத்தில் எத்தனை உயிரினங்கள் இருக்கிறது என்று விசாரிக்கறார், 35 என்று அவருக்கு பதில் வருகிறது.
தன்னையும், விவசாயியையும் அதில் கழித்து விட்டு ’உங்களிடம் 33 மாடுகள் இருக்கிறது’ என்று கூறுகிறார்.
‘நீ! சரியா சொல்லிவிட்டாய் தம்பி, உனக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு போ’,என்று அந்த நபரிடம் சொல்கிறார் விவசாயி. தனக்கு வேண்டியதை பிடித்துக் கொண்டு அந்த நபர் ஹெலிகாப்டரில் ஏத்தப் போனார்.
அப்பொழுது அந்த விவசாயி சொன்னார்,’தம்பி! உன் பெயரை நான் சரியாக சொல்லிவிட்டால்,நீ பிடித்து வைத்திருப்பதை என்னிடமே திருப்பி தந்து விடுவாயா’ என்று கேட்டார்? அந்த நபரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
உடனே அந்த பெரியவர் சொன்னார் ’தம்பி உங்கள் பெயர் #மோடி என்றார். அந்த நபருக்கு பயங்கர அதிர்ச்சியுடன் ’எப்படி என் பெயரை சரியாக கண்டுபிடித்தீர்கள்’ என்று கேட்டார்.
அது ரொம்ப சுலபம் தம்பி, உன்னை யாரும் இங்க கூப்பிடவே இல்லை.. நீயாக வந்தாய்.எத்தனை கால்நடைகள் என்னிடம் இருக்கிறது என்பது, அவைகளை வளர்த்து வரும் எனக்கு பல வருடமாக தெரியும், அதை எத்தனை என்று எண்ணி கண்டுபிடித்து சொல்வதற்கு மக்கள் வரிப்பணத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினாய்.
அது மட்டும் இல்லை தம்பி இவை எல்லாம் மாடுகள் இல்லை, செம்மறி ஆடுகள்.
அப்புறம் இன்னொரு விஷயம் தம்பி! நீ புடிச்சு வச்சிருக்கியே அது கன்னுக்குட்டி இல்லை, அது என்னுடைய நாய் அதை என்னிடம் கொடுத்துவிட்டு நீங்க கிளம்புங்க.
😂😂😂😂😂😂
வாட்சப் வைரல்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.