அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜித்தா(12 ஏப் 2017): கார் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்காததால் இரண்டு கோடி இந்திய ரூபாய் அபராதம் செலுத்தும்வரை இந்தியர் ஒருவர் சிறையில் வாடுகிறார்.


கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் சவூதியில் சொந்தமாக கார் ஒன்று வைத்திருந்தார். ஆனால் கார் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கமலேயே அந்த காரை ஓட்டி வந்திருக்கிறார்.

இந்நிலையில் முஜிபுர்ரஹ்மான் ஓட்டி வந்த கார் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரின் ஆடம்பர கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதும். சேதமடைந்த ஆடம்பர காருக்கு சுமார் 2 கோடி இந்திய ரூபாய் செலவு செய்ய வேண்டியது இருந்தது. போக்குவரத்து காவல்துறை விதிகளின்படி முழு குற்றமும் முஜிபுர்ரஹ்மான் மீதே இருந்ததாலும், முஜிப் ஓட்டிய கார் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்காததாலும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தொகையை செலுத்த மறுத்துவிட்டது.

இதனால் முஜிப் கட்ட வேண்டிய 2 கோடி இந்திய ரூபாய் அதாவது 12 லட்சம் சவூதி ரியால் நஷ்ட ஈடு தொகை கட்ட கையில் பணம் இல்லாததால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முஜிப் சிறையில் வாடுகிறார். முஜிப் வைத்திருந்தது சாதாரனமான மிக பழைய காராகும். ஏழையான மற்றும் இதய நோயாளியான முஜிப் தற்போது சிறையில் வாட, அவரது குடும்பம் கேரளாவில் சோகத்தில் வாடுகிறது.

சிறு தொகையானாலும் கவனக்குறைவாக இருந்தல் சவூதி உள்ளிட்ட கடும் சட்டதிட்டங்கள் பின்பற்றும் நாடுகளில் இதுபோன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-