அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஏப்-12
எதிர்வரும் புனித ஹஜ் யாத்திரைக்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் பல்வேறு புதிய உத்தரவுகளை சுற்றறிக்கையின் மூலம் தங்கும் விடுதிகள் மற்றும் வாடகை வீடுகளின் உரிமையாளர்களுக்கு பிறப்பித்திருந்தது.

இந்த புதிய உத்தரவுகளின்படி புனித ஹஜ் யாத்ரீகர்கள் தங்கும் விடுதிகள், வீடுகளில் 24 மணிநேரமும் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் (Safety Measures), சுகாதார வசதிகள் (Health services), சுத்தம் பேணுதல் (Cleaning), போதிய பணியாளர்களை நியமித்தல் (Enough Workers), பாதுகாப்பு வீரர்களை (Security Guards) பணிக்கு அமர்த்துதல் போன்றவைகளை வலியுறுத்தியும் கூடுதலாக ஒரு அறையினுள் 4 பேருக்கு மேல் தங்குவதற்கு அனுமதியில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

எல்லா உத்தரவுகளையும் ஏற்ற உரிமையாளர்கள் ஒரு அறையில் 4 பேர் மட்டுமே அனுமதி என்ற கூற்றை மட்டும் ஏற்க மறுத்துவிட்டனர். தங்களுடைய விடுதிக் கட்டிடங்கள் பல 6 முதல் 8 பேர் வரை தங்குவதற்குரிய இடவசதியுடன் உள்ளதென்றும், தாங்கள் ஏற்கனவே பல ஹஜ் ஏற்பாட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இந்த வருடத்திற்கு தேவையான ஒப்பந்தங்களை செய்து விட்டதாலும், சவுதி அமைச்சரவையின் முடிவை மீறும் வகையில் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் மட்டும் தனித்து வெளியிடும் இதுபோன்ற கடைசி நிமிட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: 
அதிரை நியூஸ்:  நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-