அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பி.சீதா ராமன் கடந்த மார்ச் 22-ந் தேதி ஓய்வு பெற்றார். இதனால் தேர்தல் ஆணையாளர் பதவி காலியாக இருந்தது.


இந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கும் பணியில் தமிழக அரசு கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாலிக் பெரோஸ்கான் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவர் இன்று காலை மாநில தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிய ஆணையாளராக பதவி ஏற்றார்.

மாலிக் பெரோஸ்கான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பொறுப்பு வகித்தவர். அரசுத்துறைகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அது தொடர்பான பணிகளில் சிறப்பான அனுபவம் பெற்றவர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் முழு பொறுப்பு மாநில தேர்தல் ஆணையத்தை சார்ந்தது. உள்ளாட்சி தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே மாலிக் பெரோஸ்கான் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற மே மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த சவாலான பணி புதிய ஆணையாளருக்கு காத்திருக்கிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-