அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நியூஸ்: ஏப்-27
அமீரகத்தில் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள நடப்பு போக்குவரத்து சட்டங்களில் 19 புதிய சேர்க்கைகளும் (Additional Laws), சுமார் 29 சட்டங்களை ஒற்றிணைத்தும் (Merging the Laws) புதிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளார் அமீரக தேசிய போக்குவரத்து சபையின் (The Federal Traffic Council) மேஜர் ஜெனரல் அல் ஜஃபீன் (Major General Al Zafin).

காலத்திற்கேற்ப செய்யப்படும் இதுபோன்ற மாற்றங்களின் நோக்கம் விபத்துக்களையும் அதனால் ஏற்படும் உயிர்ச்சேதங்களையும் குறைப்பதே என்றும், இதனால் டிரைவர்கள் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் வாகனங்களை இயக்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், அபராதங்கள் என்ற பெயரில் காசு பிடுங்குவதல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மணிக்கு 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட பாதையில் அதைவிட வேகமாக சென்றால் தற்போது 1000 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது இது இனி ஜூலை 1 முதல் 2000 திர்ஹமாகவும், 80 கி.மீ வேகத்திற்கு மேல் செல்பவர்கள் 3000 திர்ஹமும் செலுத்த நேரிடும் என்றும், பொதுமக்கள் சட்டதிருத்தங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு பெறும் பொருட்டே இவ்வாறு நீண்டகால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Source: Khaleej Times / Msn
தமிழில்:
அதிரை நியூஸ். நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-