அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஏப்.29:
தண்ணீருக்காக பெரம்பலூர் நகருக்குள் புகுந்த புள்ளி மான். தெரு நாய்கள் கடித்துக் குதறியதால் துடிதுடித்து இறந்தது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வெண்பாவூர், பாண்டகப்பாடி, வ.மாவலிங்கை, கை.களத்தூர், காரியானூர், அய்யனார் பாளையம், பில்லங்குளம், மேட்டுப்பாளையம், அரசலூர், குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட சித்தளி, பேரளி, பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட இரட்டை மலை சந்து, களரம்பட்டி உள்ளிட்ட வனத்துறைக்குச் சொந்தமான காப் புக் கா டு க ளில் அரி ய வகை புள் ளி மான் கள் உள் ளன. கடு மை யான வறட்சி கார ண மாக புற் கள் காய்ந்து, உண வும், தண் ணீ ரும் இன்றி மான்கள் தவித்து வரு கின் றன.
இத னால் வனப் ப கு தியை விட்டு வெளி யேறி தண் ணீ ருக் காக கிரா மங் க ளைச் சார்ந்த வயல் பகு தி க ளுக் கும், கிரா மங் க ளி லும் புகுந் து வி டு கின் றன. இதில் கடந்த 4மாதங் க ளில் மட் டுமே நாய் க ளால் துரத் தப் பட்டு, கடி பட்டு 6மான் கள் பாதிக் கப் பட்ட சம் ப வங் கள் நடந் துள் ளது.
இந் நி லை யில் நேற்று பெரம் ப லூர் நக ருக் குள் புகுந்த மான் குட்டி ஒன்றினை தெரு நாய் கள் கூட் ட மாக சேர்ந்து கடித்து, துரத் திக் கொண் டி ருந் த தால் வெளி யே றத் தெரி யா மல் ஒரு ம ணி நே ர மாக நக ருக் குள் சுற் றி வந்துள்ளது. பிறகு வெங்கடேசபுரத்தில் தடு மாறி விழுந்த மான் குட் டியை தொடர்ந்து நாய்கள் கடித்துக் குதறியதால் அந்த மான் குட்டி துடிதுடித்து இறந்தது. இறந்த மான் ஒன் றரை வய து டைய பெண் மா னா கும்.
தக வ ல றிந்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் சொர்ணப்பன் உத்தரவின் பேரில் வனத் து றை யி னர் மான் குட் டி யின் சட லத் தை மீட்டு பிரேத பரி சோ த னைக் குப் பிறகு வனப்பகுதியில் அடக்கம் செய் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-