அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஏப். 9
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனது. சராசரியாக பெய்ய வேண்டிய மழையில் 50 சதவீதம் கூட பெய்யவில்லை. இதனால் பயிர்கள் கருகி ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்போது கோடை காலம் துவங்கி விட்டதால் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. 10 மணிக்கு மேல் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் அளவு இப்போதே 100 டிகிரியை தாண்டி விட்டது. மழை பெய்தால் வெயிலின் கொடூரத்தில் இருந்து தப்பலாம் என மக்கள் மழையை எதிர் பார்த்து உள்ளனர்.
எனவே மழை பெய்து வறட்சி நீங்கி, நாடு செழிக்க வேண்டி பெரம்பலூரில் இஸ்லாமியர்கள் நேற்று( 8-4-17) சிறப்பு தொழுகை நடத்தினர். உழவர் சந்தை அருகே உள்ள மைதானத்தில் காலை 7 மணிக்கு தொழுகை தொடங்கியது. இதில் பெரம்பலூரில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களையும் சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் தொழுகை நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை மற்றும் பெரம்பலூர் முஸ்லிம் ஜமா அத் சார்பில் வடக்கு மாதேவி சாலையில் உள்ள மைதானத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-