அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஏப்.4:
லெப்பைகுடிகாடு பேரூராட்சியில் தெரு நாய்களால் விரட்டப் பட்ட புள்ளி மான். பொது மக்களால் மீட்கப்பட்டு, வனத்துறை மூலம் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், பாண்டகப்பாடி, வ.மாவலிங்கை, காரியானூர், அய்யனார் பாளையம், மேட்டுப் பாளையம், அரசலூர் பகுதிகளிலும், பெரம்பலூர் தாலுக்கா வில் எசனை, இரடை மலை சந்து, மேலப்புலியூர், களரம் பட்டி, குன்னம் தாலுகாவில் சித்தளி, பேரளி, ஆலத்தூர் தாலுகாவில் பாடாலூர், நக்க சேலம், செட்டிக் குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகள் மற்றும் சமூக வன காடுகள் உள்ளன. இவற்றில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட புள்ளி மான்கள் வசித்து வரு கின் றன.
கடுமையான வறட்சி காரணமாக உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் கிராமப் பு றங் களை ஒட் டி யுள்ள வயல் களை அண் டி வ ரும் மான் களை, தெரு நாய்கள் ஊருக்குள் வர விடாமல் விரட்டும். இதனால் தப்பி யோடும் போது தவறி கிணறு களில் விழுந்து பலியாகிறது. மேலும் சாலையை கடக்கும் போது வாகனங்களில் சிக்கி பலியாவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி இரட்டை மலை சந்து வழியாக ஊருக்குள் வந்த மான் ஒன்று, நாய்கள் விரட்டியதால் தப்பிச் செல்லும் போது, கீழக்கரை மருத முத்து என்பவருக்குச் சொந் த மான கிணற் றுக் குள் விழுந் தது. பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் அதனை மீட்டு, கால் ந டைத் துறை மருத்து வ ரின் சிகிச் சைக்கு பிறகு வனத்துறையால் பேரையூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. இந்நிலையில் நேற்று குன்னம் தாலுகா, லெப்பைக் குடிகாடு பேரூராட்சியில் புகுந்த 2 வயதுடைய பெண் மானை தெருநாய்கள் விரட்டத்தொடங்கின. அவற்றை கிராம மக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மாவட்ட வன அ லுவலர் சொர்ணப்பன், வனச் ச ர கர் ரவீந் தி ரன் உத் த ர வின் பே ரில், வன வர் காசி,வனக் காப் பா ளர் ஆணை யப் பன் ஆகி யோர் மானை, வேப்பந்தட்டை தாலுகாவிலுள்ள பேரையூர் வனப் பகுதிக்கு பாது காப் பா க கொண் டு சென்று விட் டு விட் ட னர்.
லெப்பைகுடிகாடு பேரூராட்சியில்
பாதுகாப்பாக வனத்திற்குள் விடப்பட்டது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-