அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தரையில் போய்க்கொண்டுயிருக்கும் வாகனங்கள் பல மேல பறந்துவிடும் என்பது 21ம் நூற்றாண்டின் ஆட்டோமொபைல்

துறையில் வளர்ச்சியாக பார்க்கப்பட்டது. இப்படி ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்

கக்கூடிய நாடாக அமெரிக்க, சீனா அல்லது ஜப்பான் போன்ற நாடுகளில் ஏதேனும் ஒன்றாகத்தான் இருக்கும் என்பது ஆட்டோமொபைல்இ உலகின் கணிப்பாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இதுதொடர்பாக் வெளியான அறிவிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளாக இல்லாமல், ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பறக்கும் கால் டாக்ஸிகளை விரைவில் துபாய் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த பறக்கும் கால் டாக்ஸிக்காக பல டெலிஃபோர்ட் வசதியையும் கட்டமைத்து வருகிறது துபாய் அரசு. எண்ணை வளம் கொண்ட அரபு நாடுகள் பல பொருளாதார அளவில் மட்டுமில்லாமல், நாட்டிற்கு ஏற்றவாறான தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்த பட்டியலில் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் முன்னிலை வகித்து வரும் துபாய், செயற்கையான நகரங்கள், உலகின் உயர கட்டிடம் மற்றும் அல்ட்ரா மார்டனான நகரங்கள் போன்றவற்றை கட்டுமானித்து அவ்வப்போது உலகை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

நீர், நிலத்தில் அசாத்திய வளர்ச்சியை ஏற்படுத்து விட்ட துபாய் அடுத்ததாக வான்வெளியை குறிவைத்துள்ளது. இதன்படி, விரைவில் துபாயில் பறக்கும் கால்டாக்ஸி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அனைத்து பறக்கும் கார் டாக்ஸிகளும், ஓட்டுநரின்றி தானாக இயங்கும் தொழில்நுட்பத்தின் வகையில் உருவாக்கப்படவுள்ளது.


சமீபத்தில் இதற்கான சோதனை ஓட்டத்தையும் துபாய் அரசு வெற்றிக்கரமாக செய்துபார்த்துள்ளது. சீனாவின் ட்ரான் உற்பத்தியாளர் ஈ-ஹாங் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பறக்கு கார் தொழில்நுட்பம் உயர்கம்பி வாகனமாக தயாராகியுள்ளது.


மேலும் உற்பத்தியாளர் ஈ-ஹாங் பெயருடன் 184 என்ற எண்ணை சேர்த்து ‘ஈ-ஹாங் 184’ என துபாய் அரசு பறக்கும் காருக்கு பெயர் வைத்துள்ளது. பறக்கும் கார்களில் 8 பிரோப்பலர்கள் இடம்பெற்றிருக்கும், உடமைகள் ஆகியவற்றுடன் ஒரு பயணியை மட்டும் ஏந்த செல்ல வல்லமை கொண்ட வகையில் இந்த பறக்கும் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளது.


பயணிகள் எளிதாக பயன்படுத்தும் விதத்தில் இதற்கான ஸ்மார்ட் ஃபோன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பயணி தான் இறங்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டால், பறக்கும் கார் உடமைகளுடன் பயணியை ஏந்தி சென்று சேரவேண்டிய இடத்தில் இறக்கி விடும். ஒவ்வொரு பறக்கும் கார்களின் செயல்பாடுகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பின்தொடரப்படும்.


முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் திறன் கொண்ட இந்த ஈ-ஹாங் 184 பறக்கும் கார்களை கடந்த 2013ம் ஆண்டிலிருந்து துபாய் அரசு உருவாக்கி வந்தது. 1.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பறக்கும் கார்களை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், அரைமணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

200 கிலோ எடை கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பறக்கும் கார்கள் ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய வேகம் கொண்டது.
துபாயின் இந்த பறக்கும் கால் டாக்ஸி சேவையை குறித்து ஃபோர்ப்ஸ் நிறுவனமும் பல செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் உள்கட்டமைப்புகளாக பயன்படுத்தும் தானியங்கி கால் டாக்ஸி போல் இல்லாமல், ஆபத்தை அறிந்து செயல்படும் விதத்தில் துபாய் பறக்கும் கார் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-