அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஏப். 5:
குடி நீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பெரம்பலூர் சங்குப் பேட்டையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
பெரம்பலூர் நகராட்சிக்கு தமிழ் நாடு குடி நீர் வடிகால் வாரியம் மூலம் காவிரி கூட்டு குடி நீர் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஆற்றில் தாளக்குடியிலிருந்து ராட்சத ஆழ் குழாய் மூலம் பெறப் படும் குடி நீர், தச்சன் குறிச்சி, எது மலை, பெர கம்பி, செட்டிக்குளம், தம்பிரான் பட்டி, ரங்க நாதபுரம், செஞ்சேரி வழியாக பெரம்பலூருக்கு பெறப் பட்டு விநியோகிக்கப்பட்டு வரு கிறது.
வழக்கமாக நாளொன் றுக்கு 3.20 லட்சம் லிட்டர் குடி நீர் பெறப்பட்டு வந்த நிலை யில் கடும் வறட் சி யால் நிலத் தடி நீர் மட் டம் குறைந்து தற்போது சராசரியாக 1.50 லட்சம் லிட்டர் குடி நீர்தான் பெறப்படுகிறது.
அதோடு எளம்பலூர் உப்போடை, துறை மங்கலம் ஏரி, செங்குணம் பிரிவு சாலை உள் ளிட்ட 25 இடங் க ளில் அமைக் கப் பட்ட நக ராட்சி குடி நீர் கிணறு மூலம் பெறப் ப டும் குடி நீ ரும் விநி யோ கிக் கப் பட்டு வந் தது. இதில் 20 குடி நீர் கிண று கள் வறண்டு விட் டன. இத னால் குடி நீர் விநி யோ கம் செய் யக் கோரி பொது மக் க ளின் சாலை மறி யல் போராட் டம் தொடர்ந்து வரு கி றது.
இந் நி லை யில் நேற்று நகராட்சியின் 12, 13வது வார்டு பொது மக் கள், தங்கள் பகுதிக்கு குடி நீர்விநியோகிக்கப்படாததை கண்டித்து சங்குப் பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப போது பொது மக் க ளில் பலர் சாலை யில் படுத்து கொண்டு போரா டி னர். பெரம்பலூர் நகராட்சி ஆணையர் முரளி சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிப்பதாக உறுதி அளித்தார். இதை ய டுத்து போராட் டத்தை பொது மக் கள் கைவிட் ட னர்.
திடீர் சாலை மறியலால் பெரம்பலூர்- துறையூர் சாலை, பெரம்பலூர்- ஆத்தூர் சாலை யில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-