அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் அருகே பாட்டிலால் மெக்கானிக் குத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள அயிலூரில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்துகிடப்பதாக மருவத்தூர் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இறந்துகிடந்தவர் பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை கிராமம், வடக்கு காலனித் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (39) என்பதும், இவர் பெரம்பலூரில் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை வைத்திருப்பதும், இறந்துகிடந்த பகுதியில் வியாழக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் மது அருந்தியதும் தெரியவந்தது.
மேலும், முன்விரோதம் காரணமாக அவரது நண்பர்களே பாட்டிலால் ராஜாவை குத்தி கொலை செய்திருப்பதும், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விளாமுத்தூர் பிரிவு சாலையில் நடந்த கொலை வழக்கில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ராஜா, அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, சிறுவாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாஷம் அளித்த புகாரின்பேரில், மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் வழக்குப் பதிந்து, ராஜாவின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-