அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வணிக நிறுவனங்களில் பெண்களின் செல் போன் எண், முகவரியை வாங்கிக்கொண்டு அத்துமீறல் நடப்பதாக பல புகார்களும் குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணமே உள்ளது

திருச்சி, சென்னை, கும்பகோணம், இது போன்ற மற்றுமுள்ள பெருநகரங்களில் உள்ள பிரபல்யமான துணிகடைகள், நகைகடைகளில், சூப்பர்மார்கெட், போன்ற இடங்களில், சில கடைகளில், பொருள்கள், நகைகள்,துணிகள், வாங்குவோர் களிடம், குறிப்பாக பெண்களிடம், கஸ்டமர்கேர் என்ற பெயரில் ஒரு ஃபாம் கொடுத்து அதை பூர்த்தி செய்யச் சொல்கின்றனர், அதில் சில கடைகளில் குறிப்பிடப் பட்டுள்ளவை, வீட்டு முகவரி, பிறந்ததேதி, வயது, பாலினம், திருமணநாள், தொழில், வருமானம், கல்விதகுதி, செல்ஃபோன் நம்பர் வாங்குகின்றனர், இப்படி முழு விபரங்களையும் அவர்கள் வாங்கி பிறந்தநாள், திருமணநாள், வாழ்த்துக்கள் அனுப்பி கஸ்டமரை குறிப்பாக பெண்களை, அப்படியே நட்பு பாலத்தை போட்டு கவர்ந்து இழுக்கின்றனர். இது விசயத்தில் மிகுந்த கவணமும், எச்சரிக்கையும், தேவை பரிசு கூப்பன் என்ற பெயரில் ஒரு திட்டத்தையும் வைத்து, அவர்கள் கொடுக்கும் பரிசு ஒரு பிளாஸ்டிக்டப்பா'தான் அதற்கு ஆசைப் பட்டு பெண்கள் வீட்டு முகவரி, செல்நம்பர், போன்ற வற்றைக் கொடுத்தால் பிளாஸ்டிக் "டப்பா" கிடைக்கின்றதோ இல்லையோ கஸ்டமர் "டப்பா" டான்ஸ் ஆடிவிடும்.

ஆகவே இது போன்ற இடங்களில் முகவரி, செல்நம்பர், கொடுக்க வேண்டாம்.!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-