அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜித்தா(06 ஏப் 2017): சவூதி அரேபியாவில் வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலத்தை முன் கூட்டியே பயன்படுத்தி இந்தியாவுக்கு திரும்பி செல்லுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.


சவுதியில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள், இக்காமா காலம் முடிந்தவர்கள் அல்லது புதுப்பிக்காதவர்கள், ஸ்பான்சர் இல்லாதவர்கள் அல்லது ஸ்பான்சரை விட்டு வந்தவர்கள் மற்றும் நிதாகத் மூலம் சிவப்பு கேட்டகிரியில் உள்ள நிறுவனங்களில் இருப்பவர்கள் என அனைவரும் 90 நாள் பொது மன்னிப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சவூதி அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் நேரடியாக தர்ஹீல் என்ற பகுதிக்கு விமான டிக்கெட்டுடனும், பாஸ்போர்ட்டுடனும் சென்றால் போதும் அவர்கள் கைரேகை உள்ளிட்ட செயல்பாடுகளை செய்து நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

அதேவேளை பாஸ்போர்ட் இல்லாதவர்கள் இந்திய தூதரகத்தை அனுகினால் எமெர்ஜென்சி சான்றிதழ் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வார்கள்.

இந்நிலையில் பொது மன்னிப்பு காலம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வரை உள்ளது எனினும் ரமலான் நோன்பு காலம் என்பதால் அதற்கு முன்பே பொது மன்னிப்பு காலத்தை இந்தியர்கள் உடபட அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாரு இந்திய தூதரக அதிகாரி நூர் ரஹ்மான் சேக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை 1005 பேர் மட்டுமே இந்திய தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியர்கள் நாட்டுக்கு செல்ல ஜித்தா பகுதியில் உள்ளவர்கள் தர்ஹீல் சுமேசி கேட் எண் 32 மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நூர் ரஹ்மான் சேக் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-