அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய்: துபாயில் போலீஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் ரோபோ ஒன்று நேர்முகத் தேர்வை நடத்தியது. சர்வதேச அளவில் நவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் துபாயும் ஒன்று. இந்த நிலையில், நேர்முகத் தேர்வுக்கு கேள்விகளை கேட்கும் ரோபோ இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது துபாய் காவல்துறையில் பணியாற்ற வேலை வாய்ப்பு முகாம் துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் முதல் கட்ட நேர்முக தேர்வை மேற்கொள்ள காவல்துறை சார்பில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.

சயில் அல் பர்ஹான் என பெயரிடப்பட்ட இந்த போலீஸ் ஸ்மார்ட் ரோபோ, பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் ஆரம்ப கட்ட நேர்முக தேர்வை நடத்தியது.முதல் முறையாக நேர்முக தேர்வில் ரோபோ பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியமைடைய செய்தது. முதல் நாள் தேர்வில் அமீரகத்தை சேர்ந்த 23 பேர் காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 2030ம் ஆண்டுக்குள் துபாய் காவல்துறையில் 25 சதவீதம் ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-