அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... பெரம்பலூர் மாவட்டக் காவல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட வாகன விபத்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளன எனத் தெரிவித்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்த்ரா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகன விபத்துகளைக் கருத்தில்கொண்டு, கடந்த ஜன. 1 முதல் மார்ச் 31 வரை மாவட்டக் காவல் துறை சார்பில் வாகன விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதன்படி, 134 விழிப்புணர்வு பேரணிகள், 116 இடங்களில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், இதர விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 91 என மொத்தம் 341 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2106-ல் ஜனவரி முதல் மார்ச் வரை நிகழ்ந்த 54 வாகன விபத்துகளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், நிகழாண்டில் இதுவரை நடைபெற்ற 29 வாகன விபத்துகளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 117 உயிரிழப்பு இல்லாத சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளதில் 297 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், நிகழாண்டில் 93 வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டு 249 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2016 ஜனவரி முதல் மார்ச் வரை 171 சாலை விபத்துகளும், நிகழாண்டில் 122 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதன்மூலம் 49 சாலை விபத்துகள் குறைந்துள்ளன. கடந்தாண்டு 5,362 மோட்டர் வாகன சிறு வழக்குகளும், நிகழாண்டு 12,476 மோட்டர் வாகன சிறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
அதேபோல, கடந்த 2016 ஜனவரி முதல் மார்ச் வரை மது போதையில் வாகனம் ஓட்டியதாக 139 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,161 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 55 வழக்குகள், இதர வழக்குகள் 4,007 என மொத்தம் 5,362 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 6 லட்சத்து 74 ஆயிரத்து 15 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. ஆனால், நிகழாண்டில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 2,163 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 3,705 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 605 வழக்குகளும், இதர வழக்குகள் 6,003 என மொத்தம் 12,476 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 5 லட்சத்து 76 ஆயிரத்து 600 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளும், உயிரிழப்பு, சிறு விபத்துகளும் தடுக்கப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-