அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஸ்மார்ட் போன்களின் பயன்பாடானது தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சந்தையில் அதிக வெளிவராத ஸ்மார்ட் போன்கள் தற்போது மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சாம்சங், ஆப்பிள், எல்ஜி போன்ற முண்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களை மொபைல் தயாரிப்பில் பயன்படுத்திவருகிறது.
பொதுவாக ஸ்மார்ட் போன்களில் பேட்டரி சார்ஜ் நாம் வீடியோ அல்லது படங்களை பார்க்கும்போது அதிகளவில் குறைகிறது.
வெளியூர்களுக்கு நீண்ட தூரம் நாம் பயணிக்கும் போது அதிக நேரம் மொபைலில் சார்ஜ் குறையும். அப்போது பொது இடங்களில் சார்ஜ் போடுவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியினை பயன்படுத்துவோம்.
பொது இடங்களில் சார்ஜ் போடுவதற்கு பயன்படுத்தும் கேபிள்கள் வழியாக நமது தகவல்கள்,போட்டோகள் திருடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே, வெளியிடங்களில் சார்ஜ் போடுவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.
வெளியிடங்களில் சார்ஜ் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக வெளியூருக்கு செல்லும்போது Power Bank-னை உபயோகித்து கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-