அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


எத்துணை அமைப்புகள் வேண்டுமானாலும் வரட்டும்,பணிகள் செய்யட்டும். தேர்தல் என்று வத்து விட்டால் எங்கள் வாக்கு ஒரே கட்சிக்கு மட்டுமே. இதைப் பின்பற்றினால் போதும். முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எளிதாக கிடைத்து விடும்.
மாநிலம் முழுவதும் அடிப்படை கட்டமைப்பு கொண்ட,தொடர் செயல்பாடுகள், முதிர்ச்சியான,அனுபவமிக்க தலைமை, ஆற்றல் மிக்க தொண்டர் படை கொண்ட அத்தகைய அமைப்புகளை மக்கள் அடையாளம் கண்டு அதை மட்டுமே தேர்தலில் அங்கீகரிக்க வேண்டும். உதாரணத்திற்கு...
கேரளா - முஸ்லிம் லீக்

ஆந்திரா,தெலுங்கானா - எம்ஐஎம்

தமிழ்நாடு - மமக

கர்நாடகா - எஸ்டிபிஐ
முதலில் தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களில் லீக்,எம்ஐஎம்,மமக,எஸ்டிபிஐ வலுவாக தடம் பதித்து விட்டால் பிறகு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி மற்ற மாநில கட்சிகளையும் இணைத்து அகில இந்திய அளவில் ஒண்றிணைந்து நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவத்தை எளிதாக பெற முடியும். இன்னும் வட இந்தியாவில் அஸ்ஸாமில் AUDF, மே.வங்கத்தில் வெல்பேர் பார்ட்டி,உ.பி யில் பீஸ் பார்ட்டி போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றில் AUDF வலுவாக இருக்கிறது.இந்திய அளவில் கூட்டமைப்பு உருவாகும் போது ராஜ்ய சபா எம்பிக்களையும் முஸ்லிம் கட்சிகளால் தனித்தே பெற முடியும்.
தேசிய கட்சிகள் என்று சொல்பவர்கள் ஏற்கனவே மாநிலத்தில் வலுவாக ஒரு கட்சி செயல்பாட்டில் இருக்கும் போது அதை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்னர் தேசிய கட்சிகளுக்கு வேலை இல்லை. காங்கிரஸ்,பாஜக போன்ற பழம் பெருச்சாளிகள்தான் தேசிய கட்சி என்று மாநிலங்களின் உரிமைகளை பறித்து கொண்டிருக்கின்றனர். இந்தியா என்பது ஒற்றை நாடல்ல. பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. தேசியம் என்ற பெயரில் பார்ப்பன,பனியா கும்பல் பெரும்பான்மை மக்களின் உரிமைகளை பறித்து கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகளை ஒழித்தால் மட்டுமே மாநிலங்கள் முன்னேற்றமடையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
முஸ்லிம் கட்சிகள் கூட்டணி இல்லாமலே வெற்றி பெறும் அளவுக்கு தனித்த செல்வாக்கை பெறுவதற்கும், தொகுதி மறு சீரமைப்பு, அரசியல் இட ஒதுக்கீடு, உள்ளாட்சி இட ஒதுக்கீடு என பலவற்றுக்கும் போராட வேண்டியதிருக்கிறது. தொடர்ந்து போராடுவோம்.
ஒற்றைக் கட்சியை,ஒற்றைத் தலைமையை முன்னிறுத்தி அரசியல் செய்வதே ஆரோக்கியமானது.அதிகாரத்தை பெற்றுத் தரக் கூடியது. அரசியல் அதிகாரம் இல்லையேல் அநாதைகளாய் ஆக்கப்படுவோம் என்பதை உணர்ந்து சிந்தித்து செயல்படுவோம்.
(ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-