அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஏப்.4:தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இ னால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் குடி நீர் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், வசதி படைத்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் எதனாலும் பொது மக்களுக்கான குடி நீர் தேவையை நிறை வேற்ற முடியாமல் திண்டாடி வருகின் றன.
பெரம்பலூர் மாவட்ட அளவில் கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறி யல் போராட் டங் கள் நடந் தது. இதில் பெரம்பலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ தமிழ்ச் செல்வனின் சொந்த ஊரான எளம்பலூர் கிராமத்தில் மட்டுமே மூன்றாவது முறை யாக குடி நீ ருக் காக சாலை மறி யல் போராட் டம் நடத் துள் ளது குறிப் பி டத் தக் கது.
இந் நி லை யில் எளம்பலூர் எம் ஜி ஆர் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று 30க்கும் மேற் பட்டோர் காலிக் கு டங் களை எடுத் துக் கொண்டு கலெக் டர் அலு வ ல கத் திற்கு திரண்டு வந் த னர். அங்கு கலெக் ட ரின் கார் முன்பு அமர்ந்து காலி குடங் க ளு டன் போராட் டத் தில் ஈடு பட் ட னர். பிறகு வாரத் திற்கு ஒரு மு றை யா வது குடி நீரை போது மான அ ள வுக்கு விநி யோ கிக்க ஏற் பாடு செய்ய வேண் டும் என மனு கொ டுத்து விட்டு சென் ற னர்.
எம் எல்ஏ கண்டு கொள்வதில்லை
இது குறித்து கலெக்டர் அலுவலகம் வந்த பெண் க ளி டம் கேட் ட போது, எங்க ஊர் எம் எல்ஏ இதையெல்லாம் கண் டு கொள் வ தே யில்லை. சென்னையிலேயே தங் கி யி ருக்கி றார். பெரம்பலூரிலுள்ள எம் எல்ஏ அலுவலகத்திற்கு சென்றால் கூட கட் சிக் கார இளை ஞர் கள் சாப் பி டு வ தற் கும், தூங் கு வ தற் குமே அதனை பயன் ப டுத்தி வரு கின் ற னர். மக் க ளின் குறை களை யாரும் கேட்பதில்லை எனத் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-