அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரில் அகில இந்திய கட்டுநர்கள் சங்கத் தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ஜி. வேதானந்த் புதிய சங்கத்தைத் தொடக்கி வைத்ததைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், தலைவராக எஸ். சுல்தான் இப்ராஹிம், செயலராக மு. இமயவரம்பன், பொருளாளராக எஸ். தர்மராஜ், துணைத் தலைவராக சி. ராஜாராம், துணைச் செயலராக பி. சிவக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அகில இந்திய துணைத் தலைவர் வி.என். வரதராஜன் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தியும், துணைத் தலைவர் எம்.யூ. மோகன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தும் பேசினர்.
திருவாரூர் இரெ. சண்முகவடிவேல் சிறப்புரையாற்றினார். இதில், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-