அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர்  கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம்,  வி.களத்தூர் 2 வது வார்டு N.S.B ரோடு( ராஜசுகம் மெடிக்கல் பின் புறம் வீடு) சேர்ந்தவர் ரமேஷ் (வயது28) . இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜெயா(26).இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரமேஷ் மட்டும் வி.களத்தூரில் வீட்டில் இருந்துள்ளார். மேலும், ரமேஷ் குடிபழக்கத்துக்கு அடிமையாகியதுடன் வீட்டில் இருந்த பொருட்களை விற்றும் குடித்ததாக தெரிகிறது. இதனால் மனைவி ஜெயா கணவனிடம் போனில் வாக்குவாதம்

ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரமேஷ், அவரது வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கியுள்ளார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வி.களத்தூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: காலைமலர் (பெரம்பலூர்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-