அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

உலகளவில் உயரமான கட்டிடமாகத் திகழும் துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை விடவும் உயரமான கட்டிடத்தை மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக நித்தின் கட்கரி கூறியுள்ளார்.

மும்பையில் தொழிற்துறை தரிசுநில பகுதியில் கட்கரியின் கனவு திட்டம் அமைக்கப்பட உள்ளது.


பணக்கார ரியல்எஸ்டேட்


இந்தியாவின் நிதி நகரமாகக் கருதப்படும் மும்பையில், தாஜ் ஹோட்டல், பாலார்ட் எஸ்டேட், ரிலையன்ஸ் கட்டிடம் எனப் பல முக்கிய இடங்களுக்குச் சொந்தமாகக் கொண்டுள்ள மும்பை போர்ட் டிரஸ்ட் அடுத்து மும்பையைக் கலக்கும் மிகப்பெரிய திட்டம் அமைக்க உள்ளது.


புதிய திட்டங்கள்


மும்பையில் துறைமுகத்துடன் இணையாகப் பல திட்டங்கள் தயாராக உள்ளது, மேலும் அதனை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும் பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ளோம் எனக் கட்கரி தெரிவித்தார்.மத்திய அரசு


மேலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது.


பில்டர்களும், முதலீட்டாளர்களும்


கட்கரி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் நிலத்தைப் பில்டர்களிடமும், முதலீட்டாளர்களிடமும் அளிக்கவில்லை, பயன்படுத்தப்படாமல் இருக்கும் பகுதியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த சிறப்பான முறையில் உருவாக்க உள்ளோம்.புர்ஜ் கலிஃபா


இந்த மிகப்பெரிய திட்டத்தில் பசுமை, ஸ்மார்ட் சாலைகள், மெரைன் டிரைவ் பகுதியை விடவும் 3 மடங்கு பெரிய சாலைகள், புரஜ் கலிஃபாவை விடவும் பெரிய கட்டிடங்கள் எனப் பல முக்கிய அம்சங்களுடன் திட்ட வரைவு தயாராக உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் பெறுவதற்காகக் காத்திருக்கிறோம் எனக் கட்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மும்பை போர்ட் டிரஸ்ட்


மும்பை போர்ட் டிரஸ்ட் முதலில் பாம்பே போர்ட் டிரஸ்ட் என அழைக்கப்பட்டது, இந்த அமைப்பு 1873ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் மும்பை நகரத்தில் மிகப்பெரிய அளவில் நிலத்தை வைத்திருக்கும் அமைப்பாகவும் இது திகழ்கிறது.

மேலும் இந்தியாவில் இருக்கும் 12 முக்கியத் துறைமுகத்தில் மும்பை துறைமுகம் தான் டாப்பு..
1235.53 ஏக்கர்


500 ஹெக்டரில் (1235.53 ஏக்கர்) திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டம் துறைமுகப் பணிகள் மட்டுமல்லாமல், அலுவலகங்கள், வர்த்தக வளாகம், ரீடைல், பொழுதுபோக்கு, கம்யூனிடி திட்டங்கள் எனப் பல முக்கிய அம்சங்கள் உள்ளது என் இத்திட்டம் குறித்து அறிந்த அரசு அதிகாரி தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-