அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அதிரை நியூஸ்: ஏப்-03
கடந்த ஆண்டு புனித ஹஜ் நிறைவுக்குப்பின், வெளிநாட்டு யாத்ரீகர்கள் உம்ரா செய்வதற்கான காலத்தை மேலும் 1 மாதம் நீட்டிக்க பரிசீலணை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுவாக உம்ராவுக்கான விசா வழங்கும் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பிறை 15 உடன் நிறுத்தப்பட்டு புனித ஹஜ்ஜிற்கான நடைமுறைகள் துவங்கும். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவித்தலின்படி, உம்ராவுக்கான விசா நடைமுறைகள் எதிர்வரும் ஜூன் 10 ஆம் தேதி (ரமலான் பிறை 15) அன்று நிறுத்தப்படுவதற்குப் பதிலாக ஜூலை 10 அன்று (ஷவ்வால் பிறை 15) அன்று நிறைவுறுவதால் கூடுதல் ஒரு மாத காலத்திற்கு அதிகமான உம்ரா யாத்ரீகர்கள் தங்களின் மார்க்க கடமையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-