அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாயில் பணியாற்றிய போது எனது வாழ்வியல் பாடத்தை கற்று கொண்டேன் நடிகர் விஜய் சேதுபதி

துபாய் வருகை தந்த நடிகர் சேதுபதியை சந்தித்தபோது கூறியதாவது…
சினிமாவுக்குள் நுழைவதற்கு முன் அம்மா,அப்பா என்ற குடும்ப‌ கூட்டுக்குள் வாழ்ந்து வெளி உலக தொடர்பு அறியாத நான் முதன் முறையாக வெளிநாடு பணிக்காக துபாய் வந்தேன் . கணக்காளராக பணியை துவங்கினேன் துபாயில் பணியாற்றிய போது தனிமையாக உணர்ந்தேன் ஒரு மாதம் சரியாக தூங்கவில்லை குடும்பத்தை பிரிந்து பிரிவு துயரால் பல நாட்கள் அழுதுள்ளேன் பின்னர் பழகி விட்டது. ஒரு வருடம் கழித்து எனது நண்பர்கள் புதியதாக‌ வந்த போது நான் ஆரம்ப காலத்தில் இருந்த மனநிலையில் இருந்தனர் அவர்களுக்கு நான் இங்குள்ள அனுபவங்களை கற்று தந்தேன்.


துபாயை என்னால் மறக்க இயலாது மிகசிறந்த நகரம் துபாயில் பணியாற்றிய போதுதான் வாழ்க்கை பாடத்தை,வெளி உலகத்தை கற்று கொண்டேன். துபாயில் 3 ஆண்டுகள் பணியாற்றி எனது காதல் திருமணத்திற்க்காகக ஊர் சென்றேன் மீண்டும் 13 வருடங்களுக்கு பிறகு சினிமா ஹீரோவாக விருது வாங்க துபாய் திரும்பினேன். துபாயில் கிரீக் பார்க் நான் அடிக்கடி செல்லும் இடமாகும். இங்கு எனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். இப்போது நான் பணியாற்றிய இடத்துக்கு சென்று நண்பர்களை சந்திக்க உள்ளேன்நான் சிரமப்பட்ட நாட்கள் எல்லாம் நிறைய இருக்கு. இந்நிலையை அடைந்து நிறைய ஏமாற்றங்கள், நிறையத் துரோகங்கள், நிறையப் பொய்யான பேச்சுகள்னு நிறைய பார்த்து விட்டேன் இப்போதெல்லாம் இது பழகி விட்டது இப்போதெல்லாம் அவர்களை பார்த்தால் கோபம் வருவதில்லை பரிதாபமே ஏற்படுகிறது.
விஜய் சேதுபதிதான் இதுபோன்று ஹீரோ ஆக முடியும் என்றெல்லாம் இல்லை நான் சரசாரியான ஆள்தான் ஓவ்வொருவரும் அவரவர் திறமைகளை உள்ளடிக்கியவர்கள்தான் யார் முயற்சி செய்தாலும் இலக்கை அடைய முடியும் எந்த ஒரு தொழிலும் யாருடையதும் இல்லை விரும்பிய எல்லோரும் விரும்பிய தொழிலை செய்ய உரிமை உண்டு சினிமா உள்பட..மீடியா சக்தி என்ன என்பதை கவன் படத்தில் காண்பித்துள்ளோம் உதரணமாக ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக குறிப்பிட்ட மீடியாக்கள் மூலம் செய்தி பரப்பப்பட்டது. இதனால் போர் தொடுக்கப்பட்டு நடந்ததை அனைவரும் அறிவோம் இன்று வரை அணு ஆயுதம் இருப்பதாக எந்த ஒரு தகவலும் இல்லை எனவே செய்தி பரப்படுப்படுவதன் மூலம் உலகில் எத்தகைய செயலை நிகழ்த்த முடியும் என்பதற்கு எடுக்காட்டாக இந்த‌ கவன் திரை படத்தில் மீடியாவின் பங்கு என்ன பற்றி தெரிவித்துள்ளோம் என்றார்

Thanks! keelakaraitimes.com

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-