அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 : ஏப்-05
 உங்களிடம் 30,000 திர்ஹம் இருக்கிறதா? ஆடம்பர வாகனத்தில் ஓட்டுனர் பயிற்சி பெற வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா? துபையில் அதற்கும் வழியுண்டு!

ஆடம்பர பிரியர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் 30,000 திர்ஹத்தை ஒருமுறை செலுத்தி நீங்கள் இணைந்துவிட்டால் இடையில் நீங்கள் எத்தனை முறை தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, இறுதியாக லைசென்ஸ் கிடைக்கும் வரை அத்தனை செலவுகளும் அதற்குள்ளே.

மேலும், வேறொரு வாகனத்தில் இலவசமாக பயிற்சிக்கு வந்து போக உங்களை பிக் அண்ட் டிரப் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆடம்பர பயிற்சிகளுக்காக ரேஞ்ச் ரோவர் மற்றும் மெர்ஸிடிஸ் ஜி500 மாடல் கார்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு ஆடம்பர SUV கார்களுடன் விரைவில் ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார்களும் (Luxury Sports Car) இத்திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன என துபை போக்குவரத்துத் துறையின் சார்பாக இயங்கும் எமிரேட்ஸ் டிரைவிங் இன்ஸ்டிடியூட் (Emirates Driving Institute - EDI) தெரிவித்துள்ளது.

ம்ம்... காசப் புடுங்கிறதுக்கு எப்படியெல்லாம் புதுசு புதுசா யோசிப்பாய்ங்களோ!

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ் நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-