அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

பெரம் ப லூர், ஏப்.1:
செம்மறி ஆடு களைத் திருடுவோரை கைது செய்யவலியுறுத்தி, செம்மறி ஆடுகளின் கண்களை கருப்புத் துணியால் கட்டி செம்மறி ஆடுவளர்ப்போர் சங்கத்தினர் மற்றும் உரிமையாளர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடி தாலுகா, போகலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறு மு கம் (52) என் ப வர் பெரம்பலூர் மாவட்டத் தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆடுகளை வளர்த்து வயல் வெளிகளில் கிடை அமர்த்தி தொழில் செய்து வரு கி றார். கடந்த 2016 செப் டம் பர் 5ம்தேதி எளம்பலூர் ராம சாமி என் ப வ ரது வய லில் தனது 300 செம் மறி ஆடுகளை கிடை அடைத்தி ருந் தார். அன்று நள் ளி ரவு மர்ம நபர் களால் 58 செம் மறி ஆடுகள் கடத் தப் பட் டுள் ளது.
அதி கா லை யில் பார்த் த போது கிடை யைச் சுற்றி அடைத் தி ருந்த வலை கள் அறு பட் டுக் கிடந் தது. கடத் தப் பட்ட 58 ஆடு க ளின் மதிப்பு ரூ.4.35 லட் ச மா கும். இது கு றித்து பெரம்பலூர் போலீஸில் புகார் அளித் தும் நட வ டிக்கை எடுக் கப் பட வில்லை. இதே போல் அரு கி லுள்ள தஞ்சை, புதுக் கோட்டை, திருச்சி மாவட் டங் க ளில் செம் மறி ஆடு கள் திரு டு போ வது குறித் தும், புதுக் கோட் டை யைச் சேர்ந்த ஆடு தி ரு டு வோர் மீது புகார் கள் அளித் தும், அவர் க ளின் புகைப் ப டங் களை ஆதா ர மாக அளித் தும் நட வ டிக்கை எடுக் கப் ப ட வில்லை.
இத னி டையே நேற்று செம் ம றி ஆடு வளர்ப் போர் சங்க மாநில பொதுச் செய லா ளர் குருந் த லிங் கம், மாநி லப் பொரு ளா ளர் பால கி ருஷ் ணன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் செல்வ ராஜ், செய லா ளர் குருந் த லிங் கம், பொரு ளா ளர் சந் தி ரன், சேலம் மாவட் டத் தலை வர் லிங் க ராஜ், செய லா ளர் மலைச் சாமி, பொரு ளா ளர் குருந் த லிங் கம், திருச்சி மாவட் டச் செய லா ளர் கணே சன், பெரம்பலூர் ஆறு முகம் உள் ளிட்ட ஆடு வளர்ப் போர் சங் கத் தி னர் மற் றும் உரி மை யா ளர் கள் 30க்கும் மேற் பட் டோர், 10க்கும் மேற் பட்ட செம் மறி ஆடு க ளின் கண் க ளில் கருப் புத் துணி க ளைக் கட்டி அழைத்து வந்து பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கம் முன்பு முற் று கை யிட் ட னர். பின் னர் கலெக் டர் அலு வ ல கத் தில் கோரிக்கை புகார் மனுக் களை அளித் து விட் டுச் சென் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-