அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: துபாயில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட‌ தமிழர் திருவிழா நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. யுஏஇல் செயல்படும் தமிழ் 89.4 பண்பலை 2 வருடங்களை கடந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை தொடர்ந்து ' தமிழ் திருவிழாவை ' கொண்டாட அழைத்தது. ஏப்ரல் 7 - Etisalat academy மைதானத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய திருவிழா காலை முதலே மக்கள் வெள்ளத்தில் களை கட்ட துவங்கியது - குடும்பம் குடும்பமாக திருவிழாவை காண மக்கள் வந்தனர் . திருவிழாவிற்கான எல்லாவிதமான அடையாளங்களையும் தன்னகைத்தே பெற்று திகழ்ந்தது

காலை 10 மணி முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளான.
உறியடி , கயிறு இழுத்தல் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன எல்லா போட்டிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தம்பதிகள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பிலும் வரவேற்பும், ஆதரவும் இந்த போட்டிகளுக்கு இருந்தது. மைதானத்தின் சுற்றியும் 40க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன மக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

தமிழ் உணவு வகைகளான இட்லி, தோசை மற்றும் பிரியாணி வகைகளும் - கரும்பு சாறு - இளநீர் உள்ளிட்ட பானங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு கடைகளிலும் பார்வையாளர்களை கவரும்படியாக அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தது என்று ஸ்டால் உரிமையாளர்கள் தெரிவித்ததும் அதே போன்று பார்வையாளர்கள் தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது .
மாலை 4 மணி முதல் மேடை கலை நிகழ்ச்சிகள் தொடங்கின - ரோபோ s ஷங்கர் - இமான் அண்ணாச்சி - அசத்தல் மன்னன் கிரி - மிமிக்ரி பாஸ்கர் உள்ளிட்டோர் மக்களை நகைச்சுவை வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

மேடையில் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளும் பார்வையாளர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியது . அமீரக குழைந்தைகளின் நடனம் அனைவரையும் கவர்ந்தது ... தமிழ் 89.4 பண்பலை அறிவிப்பாளர்கள் - நிம்மி, நாகா , கீர்த்தனா , மயில் , பிராவோ மற்றும் ராம் விக்டர் திருவிழவை தொகுத்து வழங்கினர். பிரபங்களின் பங்களிப்பும் ரசிகர்களின் ஆனந்த திருவிழாவாக இது இருந்தது.

பிரபலங்களோடு இணைந்து தமிழ் பண்பலை நிர்வாக இயக்குனர் சோனா ராம் மற்றும் சக்தி ராம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த எல்லா ஸ்பான்சர் களுக்கும் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் நினைவு பரிசினை வழங்கினார். மற்றும் தமிழ் 89.4 பண்பலை குழுவினரோடு சூர்யா ராம் மேட்டரும் ஆதித்யா ராம் அவர்களும் இனைந்து இந்த மாபெரும் நிகழ்ச்சியை ஆர்கானிக் ஈவென்ட்ஸ் மூலம் செயல்படுத்தினார்கள் . அல் ஷமில் அட்வெர்ட்டிசிங்கும் இணைந்து வழங்கினார்கள்

அமீரகத்தில் முதன் முறையாக 10000 கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இணைந்து தமிழ் திருவிழாவை உற்சாகமாய் கொண்டாடினர். தமிழ் மக்களை தவிர மற்ற மொழி பேசும் மக்களும் வந்திருந்து சிறப்பாக கொண்டாடியது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-