அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

உலகை வியக்க வைக்கும் ‘பாண்டி’
உலகை வியக்க வைக்கும் ‘பாண்டி’: சின்ன கோவா பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியை ஆண்டு வந்த கலைகளின் தாயகம் என்றறியப்படும் பிரான்ஸ் தேசம் வளமான கலாச்சாரத்தையும், அற்புதமான கட்டிடக்கலையையும் இந்த நகரத்திற்கு பரிசாக வழங்கிச் சென்றுள்ளது.

இப்போதும் பாண்டிச்சேரியில் எங்கும் வியாபித்து இருக்கும் பிரெஞ்சு கலாச்சாரமும், பாரம்பரியமும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உண்மையில் பிரெஞ்சு தேசத்தில் இருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும். பாண்டிச்சேரியில் ஒருநாள் பொழுதை கழிப்பதென்பது சொர்கத்தின் வாயிலை தொட்டுத் திரும்புவது போல. ஏனெனில் மாறுபட்ட கலாச்சாரம், அற்புதமான கட்டிடங்கள், ருசியான உணவு வகைகள், எல்லாவற்றுக்கும் மேலாக அமைதியும் ஏகாந்தமும்.

நீங்கள் பாண்டிச்சரி வந்தால் சுன்னாம்பாறு போட் ஹவுஸிலிருந்து உங்கள் பயணத்தை தொடங்குவது சிறப்பான தொடக்கமாக இருக்கும். அதன் பின்னர் அரிக்கமேடு, பொட்டானிக்கல் கார்டன், பிரெஞ்சு வார் மெமோரியல், பாண்டிச்சேரி கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என்று ஒரு உலா வந்தீர்கள் என்றால் சொர்கத்தின் வாயிலை தொடுவது என்றால் என்னவென்று உங்களுக்கு விளங்கும். இவை யாவும் 50 கிலோமீட்டர் சுற்றளவில் அருகருகேயே அமைந்துள்ளது நம் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு சுற்றிப்பார்க்கவும் எளிமையாக இருக்கும்.

பாண்டிச்சேரி என்றால் நம் நினைவிற்கு வருவது கடற்கரை தான். அதையும் தாண்டி பல சுற்றலா தலங்கள் இங்கு உள்ளது. இந்த அரிய இடங்களே பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. அவற்றில் சிலவற்றை காண்போம்.ஆரோவில்:

ஆரோவில் என்பதற்கு வில் என்பது பிரெஞ்சு பொருள். ஆரோவில் என்றால் ஸ்ரீ அரவிந்த நகரம் என்றாகும். புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது.

உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 12 4நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.பொட்டானிக்கல் கார்டன்:

புதுச்சேரி புது பஸ்நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826-ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

சுமார் 1500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.அரிக்கமேடு:

பழங்கால ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் ‘அரிக்க மேடு’. புதுச்சேரியில் இருந்து 4கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது.

ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. இதுமட்டுமல்லாது, மிக பழமையான மணக்குள விநாயகர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும் இங்கு ஏராளம்.

படகு வீடு:

பாண்டிச்சேரிக்கு அருகில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள படகு வீடு பயணம் இங்கு உள்ளது. 2 தளங்களை கொண்ட இப்படகு வீட்டில் சமையல் கூடம், உணவருந்தும் பகுதி, கழிவறை வசதியுடன் உள்ள குளிரூட்டப்பட்ட 3 அறைகள், கருத்தரங்கம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக இடவசதியுடன் இயற்கை சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக தூய்மை படுத்தப்பட்ட குடிதண்ணீர், வண்ணத்தொலைகாட்சி பெட்டி, அழகிய இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பிரான்ஸ் போர் நினைவிடம்:

புதுச்சேரியில் கௌபர்ட் அவென்யூ என்ற இடத்தில் அமைந்திருப்பது பிரான்ஸ் போர் நினைவிடம். முதல் உலகப் போரின் போது பிரான்ஸ் நாட்டுக்காக போரிட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.நினைவு சின்னங்கள்:

கி.பி ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இவை. சில்ட்ரன்ஸ் பார்க், பாரதி பூங்கா, காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் நினைவு கட்டிடங்களாகும்.

SHARE.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-