அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஏப்-05
சாலைகளை கடப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை பயன்படுத்தாமல் சாலையின் குறுக்கே ஒடிக் கடப்பதால் பலர் உயிழக்கவும், உடல் உறுப்புக்களை இழக்கவும் காரணமாக அமைந்துள்ளன.

எத்தனை முறை எச்சரித்தாலும் பாதசாரிகளின் (Jaywalkers) காதுகளில் இவை விழுவதேயில்லை. எனவே, முறையற்ற வகையில் சாலையின் நடுவே சடுகுடு ஆடுவோரை பிடித்து 200 திர்ஹம் அபராதம் விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தை ஷார்ஜா போலீஸார் கடுமையாக நடைமுறைப்படுத்த துவங்கியதை அடுத்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 894 பிடிபட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது தலா 200 திர்ஹமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜீப்ரா கிராஸிங் எனப்படும் பாதையில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை தந்து வாகனங்களை நிறுத்தாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம் அபராதமும் 6 கரும்புள்ளிகளும், பாதசாரிகளின் நடைமேடையின் மீது வாகனங்களை பார்க்கிங் செய்வோருக்கு 500 திர்ஹம் அபராதமும், பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுவோருக்கு 200 திர்ஹம் அபராதமும் 3 கரும்புள்ளிகளும் வழங்கப்படும் என போக்குவரத்து சட்டங்கள் எச்சரிக்கின்றது.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-