அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்ந்தெடுக்க உதவும் வகையில் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் 2017 பொதுத் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பது குறித்த புரிதலை உணர்த்தும் வகையில் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொள்ளும் “வழிகாட்டி” நிகழ்ச்சியினை தமிழகம் முழுவதும் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 6.4.2017 மற்றும் 7.4.2017 ஆகிய நாட்களில் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் சார்ந்த பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல் பற்றிய கருத்தரங்கம் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் 06.04.2017 வியாழக்கிழமையன்று பெரம்பலூர் ஒன்றிய அளவில் 10 ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியிலும், 07.04.2017 வெள்ளிக்கிழமையன்று வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ­10ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், 12ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு உடும்பியம் ஈடன்கார்டன் மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்தில் 10ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு வான்புகழ் வள்ளுவர் மேல்நிலைப் பள்ளியிலும், 12ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 10ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு பாடாலூர் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், 12ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு பாடாலூர் அன்னை மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது.


இதில் கலந்துகொள்ளும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் காலை, மாலை தேனீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து மாணவ-மாணவிகளும் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி: காலைமலர்.(பெரம்பலூர்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-