அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஏப்-10
சவுதியில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி பல்லாயிரக்கணக்கான இந்தியர்களும் நாடு திரும்பவுள்ளனர். இவர்களில் பலர் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளர்களே அதிகம்.

இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்தி நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு சிறப்பு விமான கட்டணத்தில் 50% சலுகையை ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை மேலாளர் குந்தன் லால் அறிவித்துள்ளார். அதன்படி, ஜித்தா, ரியாத் மற்றும் தம்மாமிலிருந்து டெல்லி செல்லும் பயணிகள் 659 சவுதி ரியால்களும் மற்ற இந்திய விமான நிலையங்களுக்கு செல்ல 595 சவுதி ரியால்களும் செலுத்தினால் போதும்.

ஜித்தா மற்றும் ரியாத்திலிருந்து 40 கிலோ பேக்கேஜூம், தம்மாமிலிருந்து 30 கிலோ பேக்கேஜூம் உடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த சலுகை கட்டண விமான டிக்கெட்டுகளை எந்த டிராவல் ஏஜென்ஸியிடமும் இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ள அவசரகால வெளியேற்று சான்றிதழ் (Emergency Certificate) அல்லது சவுதி பாஸ்போர்ட் துறையால் வழங்கப்பட்டுள்ள இறுதி வெளியேற்று விசாவை (Final Exit Visa) காண்பித்தோ பெற்றுக் கொள்ளலாம்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இந்த சலுகை அறிவிப்பை பல்வேறு இந்திய சமூக தொண்டு நிறுவனங்களும் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-