அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாடாலூர், ஏப்.9:
பெரம்பலூர் அருகேயுள்ள கொளத்தூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 33 பேர் காயமடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூரில் நேற்று ஜல்லிக் கட்டு நடை பெற்றது. காலை 10 மணி முதல் காளைகள் அவிழ்த்து விடப் பட்டன. ஏ.டி.எஸ்.பி ஞான சிவக்குமார், டிஎஸ்பி கார்த்திக், தாசில்தார் சீனி வாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்க 399 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 343 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.
பெயர் பதிவு செய்திருந்த 202 வீரர்களில் மருத்துவ பரிசோதனைக் குப்பின் 187 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மாடுகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 33 பேர் காயமடைந்தனர். 
இதில் அரியலூர் மாவட்டம் அன்னி மங்கலம் பால முருகன் (30), வெற்றியூர் செல்வம் (45) ஆகியோர் படுகாயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கொளக்காநத்தம் அரசு மருத்துவ மனை டாக்டர்கள் அசோக், முத்து சாமி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

 கொளக்கா நத்தம் அரசு மருத்துவ மனை டாக்டர்கள் அசோக், முத்து சாமி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடி படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குளத்தூரில் நேற்று ஜல்லிக் கட்டு நடந்தது. சுற்றி வளைத்த வீரர்களை நெருங்கவிடாமல், பாய்வது போல மிரட்டும் காளை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-