அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஏப்.7:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஊர்களில் மக்கள் குடி நீர் கேட்டு சாலை மறியலில் ஈடு பட்டனர்.
பெரம்பலூர் அரு கே யுள்ள வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் குறிப் பிட்ட ஒரு தெருவின் மேல் நிலை நீர்த் தேக் கத் தொட் டிக்கு செல் லும் குழா யி லி ருந்து மற் றொரு தெரு மக் க ளுக்கு தண் ணீர் பிரித் து வி டு வ தால், போது மான அழுத் த மின்றி குடி நீர் மேல் நிலை நீர்த் தேக் கத் தொட் டிக்கு ஏற் ற மு டி ய வில்லை.
இத னால் கடந்த 5 நாட் க ளாக குடி நீர் விநி யோ க மின்றி பாதிக் கப் பட்ட பொது மக் கள் நேற்று காலை 6.45 மணி ய ள வில் திடீர் சாலை மறி யல் போராட் டத் தில் ஈடு பட் ட னர். தக வல் அறிந்து சென்ற பெரம்பலூர் ஒன்றிய தனி அலுவலர் ஆலய மணி பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை தீர்ப் ப தாக உறு தி ய ளித் த தால் 7.45க்குப் போராட் டம் கைவி டப் பட் டது.
இந்த மறி ய லால் பெரம்பலூர்-செட்டிக்குளம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் பெரம்பலூர் அதிமுக எம் எல் ஏ வான தமிழ்ச் செல் வ னின் சொந் த ஊ ரான எளம் ப லூ ரில் ஏற் க னவே 2 வாரங் க ளில் 3 முறை குடி நீர் கேட்டு சாலை மறி யல் நடந் துள்ள நிலை யில், நேற்று எளம்பலூர் சமத்துவபுரம் மக்களால் புற வழிச் சாலை 4 வழி சந்திப்பில் காலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதற்கும் ஒன்றிய தனி அ லுவலர் ஆலய மணி நேரில் சென்று சமர சப் பேச் சு வார்த்தை நடத்தி தண் ணீர் வி டு வ தாக உறு தி ய ளித் தால் மக் கள் மறி யலை கைவிட் ட னர். இத னால் ஒரு மணி நேரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
இதே போல் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராமத்தில் மேட்டுத் தெருவைச் சேர்ந்த பொது மக்கள் 10 நாளாகக் குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து தழுதாழை சாலையிலுள்ள பெருமாள் கோயில் அருகே மக் கள் மறி ய லில் ஈடு பட் ட னர். இது பற்றி தக வல் அறிந்து வேப்பந்தட்டை ஒன்றி ய ஆணையர் சேகர் பேச்சு வார்த்தை நடத் தி ய தை ய டுத்து போராட் டத்தை மக் கள் கைவிட் ட னர்.
குடி நீர்ப் பிரச் னை யால் பொது மக்கள் பெரிதும் திண்டாடி வரும் நேரத்தில், அதனை சமா ளிக்க முடி யா மல் உள் ளாட்சி அமைப் பு க ளின் அதி கா ரி கள் திண றி வ ரு வது பெரம் ப லூர் மாவட் ட அளவில் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-