அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...: ஏப்-03
துபை மற்றும் ஷார்ஜாவில் துபை போக்குவரத்துத் துறை மற்றும் ஷார்ஜா போலீஸ் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் (road safety awareness campaign) ஒரு பகுதியாக சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கும் டிரைவர்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுவோருக்கு (campaign covers the entire spectrum of road users including, drivers, pedestrians and cyclists) மொத்தம் 30,000 திர்ஹங்களை ஸ்பாட் பரிசுகளாக வழங்கவுள்ளனர்.

இன்றும் (ஏப்-3) நாளையும் (ஏப்-4) துபையிலும், நாளை மறுநாள் (ஏப்-5) ஷார்ஜாவிலும் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உடனடி பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சாலைகளை கடக்கும் பாதசாரிகள் (pedestrian crossings), சீட் பெல்ட் அணிந்திருக்கும் டிரைவர் (wearing seat belts), குழந்தைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு இருக்கைகளை பயன்படுத்துவோர் (ensuring the use of child safety seats), லேன்களை மதித்து வாகனம் ஓட்டுவோர் (observing lane discipline), சாலையில் மரியாதை மற்றும் கருணையுடன் நடந்து கொள்வோர் (being courteous), வாகனம் ஓட்டும் போது கைகளில் சுமந்து மொபைல் போன் பயன்படுத்தாத ஓட்டுனர்கள் (using hands free mobiles), முறையாக சமிஞ்கை விளக்குகளை பயன்படுத்துவோர் (using indicators) என தினமும் 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக தலா 1000 திர்ஹத்துடன் சான்றிதழ் ஒன்றையும் (spot cash prize with certificate) பரிசாக வழங்கி கௌரவிக்கவுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ் நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-