அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர்- அய்யலூர் பிரிவு சாலையில் சனிக்கிழமை புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் அந்த கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கடையை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், டாஸ்மாக் அலுவலர்கள் மற்றும் போலீஸார், அப்பகுதிக்கு சென்று முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர்- ஊட்டத்தூர் பிரிவு சாலையிலும் டாஸ்மாக் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த ஆலத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள், போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-