அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பாடாலூர், ஏப். 10:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராசு மகன் பெரிய சாமி (12). அதே கிராமத்தை சேர்ந்தவர் சாமி துரை மகன் ஷருண் (11). இருவரும் தொண்டப்பாடி அருகேயுள்ள அல்லி நகரம் கிராமத்தில் உள்ள அரசு நடு நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.
நேற்று பள்ளி விடு முறையானதால் அரியலூர் ஆதி மூலம் என்பவருக்கு சொந்தமான செம் மண் குவாரியில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் குளிக்க சென்றனர். தண்ணீரில் இறங்கிய போது இருவரும் மூழ்கி பலியாகினர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்து விட்டு, மாணவர்களின் சடலத்தை மீட்டனர். தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் 2 பேரின் சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-