அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஏப்.17:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 26 கிராமங்களில் முயல் வேட்டை நடந்தது. காலையிலிருந்து வேட்டையாடிய முயல்களை மாலையில் வீதி வீதியாக தோரணமாகக் கட்டி ஆடிப் பாடி பொது மக்கள்  தூக்கிச் சென்றனர்.
சித்திரை மாதம் தொடங்கியவுடன் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் முயல் வேட்டை நடத்தப் படுவது வழக்கம். இதன் படி பெரம்பலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், கோனேரி பாளையம், நாவலூர், துறை மங்கலம், லாட புரம், குரும்பலூர், பாளையம், எசனை, களம்பட்டி, அம்மாப்பாளையம் ஆகிய கிராமங்களில் நேற்று முயல் வேட்டை நடை பெற்றது. பாடாலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட விஜயகோபால புரம், கூத்தனூர், சிறு வயலூர், தேனூர், டி.களத்தூர், பொம்மனப்பாடி, அய்யலூர் ஆகிய கிராமங்களிலும், அரும்பாவூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கள்ளப்பட்டி, பெரியம்மா பாளையம், தொண்டமாந்துரை, அரசலூர், அன்ன மங்கலம், குன்னம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வேள்வி மங்கலம், கை.களத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வெண்பாவூர் உள் ளிட்ட கிரா மங் க ளி லும் முயல் வேட்டை நடை பெற் றது.
இத னை யொட்டி நேற் று காலை 6 மணி ய ள வில் வீட் டுக்கு ஒரு ஆள் என நூற் றுக் கணக் கா னோர் தடி க ளு டன், வளர்ப்பு நாய் க ளு டன் வேட் டைக் குப் புறப் பட் டுச் சென் ற னர். மாலை வரை கிரா மங் ளுக்கு வெளி யே யுள்ள மலை ய டி வா ரம், ஆறு, ஓடை, காடு க ளில் வேட் டை யா டி னர். மாலை யில் வேட் டை யாடி பிடி பட்ட முயல் களை தோர ணம் போல் கட்டி தெருக் க ளில் ஊர் வ ல மாக ஆடிப் பாடி கொண்டு சென் ற னர். பிறகு கோயில் முன்பு வேட்டை யாடிய முயல் களை சாமிக் குப் படை ய லிட் டுப் பிற குப் பங் கிட்டு அனைத்து வீடு க ளுக் கும் சரி சம மாக வழங்கி சமைத்து சாப்பி ட்ட னர். இந்த முயல் வேட்டை களால் கிரா மமே திரு வி ழாக் கோலம் பூண் டது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-