அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அதிரை நியூஸ்: ஏப்-22
துபாய் : துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம் ஏப்ரல் 22 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இலவச மருத்துவ முகாமை நடத்த இருக்கிறது. துபாய் அல் ராஸ் மெட்ரோ ஸ்டேசன் எதிரில் அமைந்துள்ள அல் அப்ரா கிளினிக்கில் இந்த மருத்துவ முகாம் நடக்கிறது.

அமீரகத்தில் இந்த ஆண்டு சமூக தொண்டு ஆண்டாக அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் பொது மருத்துவம் மற்றும் பல் ஆகிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது.

பொது மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த டாக்டர்களும், பல் மருத்துவத்தை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் நஜிமா தலைமையிலான குழுவினரும் ஆலோசனை வழங்க இருக்கின்றனர்.

இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள், முதுவை ஹிதாயத் 050 51 96 433, ஹமீது யாசின் 052 777 8341, முகைதீன் அப்துல் காதர் 050 658 9305 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-