அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஏப். 6:
பெரம்பலூரில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டுமென முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை வழங்கினார்.
தமிழக அளவில் பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடந்தது. இந்த பொதுத் தேர்வை அரசு பள்ளி கள், ஆதி திராவிடர் நலப் பள் ளி கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 68 மேல் நிலைப் பள்ளி களை சேர்ந்த 4,701 மாணவர்கள், 4,569 மாணவிகள் என மொத்தம் 9,270 மாண வர் கள், 24 மையங்களில் எழுதினர். தனித் தேர் வர் க ளும் தேர் வெ ழு தி னர்.அதே போல் பெரம் ப லூர் மாவட் டத் தில் எஸ் எஸ் எல்சி பொதுத் தேர்வு மார்ச் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடந் தது. எஸ் எஸ் எல்சி பொதுத் தேர்வை அரசு பள்ளிகள், ஆதி திராவிட நலப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகள், மெட் ரிக் பள் ளி கள் என பெரம் ப லூர் மாவட் டத் தில் உள்ள 136 உயர் நிலை, மேல் நி லைப் பள் ளி களை சேர்ந்த 5,256 மாண வர் கள், 4,506 மாண வி கள் என மொத் தம் 9,762 பேர், 32 மையங் க ளில் தேர் வெ ழு தி னர். தனித் தேர் வர் க ளும் தேர் வெ ழு தி னர்.
இதை தொ டர்ந்து எஸ் எஸ் எல்சி பொதுத் தேர்வு விடைத் தாள் திருத் தும் பணி கள், பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள பனி மலர் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 1ம்தேதி முதல் நடந்து வரு கி றது. மாவட்ட கல்வி அலு வ லர்(பொ) அம்பிகாபதி தலை மை யில் பணி கள் விறு வி றுப் பாக நடந்து வரு கி றது. இந் நி லை யில் பிளஸ்2 பொதுத் தேர்வு விடைத் தாள் திருத் தும் பணி கள், ரோவர் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று முதல் நடந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனு சாமி தலைமையில் பணிகள் நடந்து வரு கிறது.
இந்த பணி களை நேற்று துவக்கி வைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனு சாமி பேசும் போது, முதன்மை விடைத் தாள் திருத்துவோர், உதவி விடைத் தாள் திருத் து வோர் மிகுந்த கவ னத் து டன் பணி களை மேற் கொள்ள வேண் டும். இந்த விடைத் தாள் க ளில் மாண வர் க ளில் உயர் கல் விக் கான திட் ட மி டல், நம் பிக்கை, எதிர் கா லம் இருப் ப தால் கவன குறை வின்றி பணி யாற்ற வேண் டும் என் றார்.
மாவட்ட கல்வி அலுவலர் (பொ) அம்பிகாபதி, முதன்மை கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர்கள் பிரேம் குமார், மணி வண்ணன் உடனிருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-